பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

மாயா விநோதப் பரதேசி

கொள்வதென்றால், தானும் தன் கணவனும், வெள்ளைக்காரர்கள் இருப்பது போல, சம அதிகாரம் சுயேச்சை முதலியவற்றோடு இருந்து வாழ்வோம் என்றே எண்ணி இருந்தாளன்றி, இந்திய மாதர்கள் நடப்பது போலத் தான் புருஷனிடம் பணிவாகவும் அவனது மனதிற்குகந்த விதமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கனவிலும் நினைத்தவளே அன்று. அது நிற்க, தனது புருஷனால் வணங்கப்படும் அவனது பெற்றோர் பெரியோர்களிடத்தில் தானும் பணிவாக நடந்து அவர்களுக்கு எல்லாம் சிச்ருஷை செய்ய வேண்டும் என்ற சங்கதியை அவள் காதாலும் கேட்டவளே அன்று. பொதுவாக இந்திய மாதர் படிக்காத மூடர்களாக இருப்பது பற்றி, புருஷர்கள் அவர்களைக் கேவலம் அடிமைகள் போல இழிவாக நடத்துகிறார்கள் என்றும், எல்லா ஸ்திரீகளும் இங்கிலிஷ் பாஷை கற்று அறிவாளிகளாய்த் தங்களது புருஷர்களால் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவள் நினைத்திருந்தாள். கந்தசாமி நன்றாய்ப் படித்தவன் என்றும் நற்குண நல்லொழுக்கம் வாய்ந்தவன் என்றும் அவள் கேள்வியுற்றிருந்தவள் ஆகையால், தானும் அவனுக்குச் சமதையாகப் படித்திருப்பதால், அவன் தன் மீது அதிகாரம் செலுத்த மாட்டான் என்ற உறுதியைக் கொண்டிருந்தாள். ஒயாப் படிப்பினால், அவளது மனோமெய்களின் சக்தி ஒருவாறு மலினம் அடைந்திருந்தது. ஆனாலும், அவளது பருவகால லக்ஷணப்படி இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவித தாகம் அவளது மனதின் ஒரு மூலையில் இருந்து வருத்திக் கொண்டிருந்தது. தனக்கு மற்ற சகலமான விஷயங்களிலும் குறைவே இல்லாதிருந்தாலும், ஏதோ ஒரு குறை மாத்திரம் இருந்து வந்ததாகவும், அது பூர்த்தியாகாத வரையில் தனது மனம் சாந்தம் அடையாதென்றும், தனது வாழ்க்கை சந்துஷ்டி அற்றதாய் இருக்கும் என்றும், கனவுபோல ஒரு நினைவு தோன்றிக்கொண்டே இருந்தது. தான், எவ்வளவு தான் இங்கிலீஷ் பாஷையைப் படித்துக் கரைகண்டாலும், அபாரமான செல்வத் திற்கு உரியவளாக இருந்தாலும், சகலமான செல்வாக்கும் உடையவளாக இருந்தாலும், நல்ல படிப்பாளி என்றும், பட்டதாரி என்றும் சகலராலும் அபாரமாகப் புகழப் பெற்றாலும்,