பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

மாயா விநோதப் பரதேசி

கொள்ளாமல், தனது கடைக்கண் பார்வையைச் செலுத்தி கந்தசாமியின் முகமாறுபாட்டைக் கவனித்தபடி சிறிது தூரத்தில் இருந்த ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டான். கொடி முல்லையம்மாள் தனது புருஷன் பக்கத்தில் இருப்பதைக் கருதி நாணிக் குனிந்து வந்தவள் நிமிர்ந்து மனோன்மணியம்மாளை நோக்கி சந்தோஷமாகப் புன்னகை செய்து , “வருகிறேன். அம்மா!” என்று நிரம்பவும் மிருதுவான குரலில் உத்தம ஜாதி ஸ்திரீ போல மறுமொழி கூறினாள். ஆனால், அவள் நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ளாமல், பக்கத்தில் இருந்த கட்டிலண்டை போய் கோபாலசாமியின் திருஷ்டியில் படாதபடி நாணிக்கோணி மறைவாக நின்று கொண்டாள்.

அதைக் கண்ட மனோன்மணியம்மாள் வியப்படைந்து, “ஏனம்மா நிற்கிறீர்கள்? நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ளுங்களேன்” என்று நயமாகவும், அன்பாகவும் வற்புறுத்திக் கூறிய வண்ணம் கொடிமுல்லையம்மாளை உற்று நோக்கினாள். பெண் வேஷந்தரித்து வந்திருந்த கந்தசாமியை நாம் கந்தசாமி என்று குறிப்பிடுவது சுவைக்குறைவாகத் தோன்றும் ஆதலால், நாம் அவனைக் கொடிமுல்லையம்மாள் என்று குறிப்பிடுகிறோம் என்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆதலால், அதுபற்றி நாம் எவ்வித சமாதானமும் கூறவேண்டிய அவசியம் இராதென்று நினைக்கிறோம்.

நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று மனோன்மணியம்மாள் மறுபடியும் கூறி உபசரித்ததைக் கேட்ட கொடி முல்லையம்மாள் முன்னிலும் பன்மடங்கு அதிக கிலேசம் அடைந்தவள் போல நடித்து மனோன்மணி அம்மாளை இனிமையாகப் பார்த்து, “பரவாயில்லை. நாங்கள் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகப் போகிறவர்கள் தானே. நான் இப்படியே நிற்கிறேன். இந்நேரம் வண்டியில் உட்கார்ந்து தானே வந்தேன். நிற்பதே காலுக்குச் சுகமாக இருக்கிறது. நீங்கள் நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று மறுமொழி கூறிய வண்ணம் அடிக்கடி கோபாலசாமியினது முகத்தைப் பார்த்தாள். தனது புருஷனுக்கு எதிரில் தான் நாற்காலியில் உட்கார்ந்து