பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மாயாவிநோதப் பரதேசி

அவளுக்குத் தெரிகிறதில்லை. அதற்காக நூறு, இருநூறு செலவு செய்து அடிக்கடி இங்கிலீஷ் டாக்டர்களை வரவழைக்க நேருகிறது. இப்படிப்பட்ட அநந்தமான விபரீதங்கள் எல்லாம் நேருவதற்கு ஆண் பிள்ளைகளே முக்கியமாக உத்தரவாதிகள் அன்றி பெண்பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

கோபாலசாமி:- (சிரித்துக் கொண்டு) அப்படியானால், இப் போது கலெக்டருடைய மகளை நீ கட்டிக் கொள்ளப் போகிறாயே, அவர்களுடைய வீட்டில், ஒரு துரும்பை எடுத்துப் போடு வதற்குக் கூட ஒரு வேலைக்காரி இருப்பாளே; அந்தப் பெண் உன்னுடைய வீட்டுக்கு வந்தவுடனே நீ கொஞ்சமும் தாட்சணியம் பாராமல், அவளை விட்டே சமையல் முதலிய எல்லா வேலைகளையும் செய்து கொள்வாய் போல் இருக்கிறதே. அவள் இப்போது பி.ஏ. வகுப்பில் படிக்கிறதாகக் கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. நீயும் பி.ஏ. பரிட்சையில் தானே தேறி இருக்கிறாய். அவள் உனக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாளா, அல்லது, உன்னிடம் பணிவாக நடந்து, உனக்கு வேலைக்காரி போல சமையல் செய்து போடுவாளா?

கந்தசாமி:- அது தான் எனக்கும் பெருத்த கவலையாக இருக்கிறது. இந்த வெள்ளைக்காரர்கள் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுப்பதாக நம்முடைய பெண்களுக்கெல்லாம் பெருத்த தீங்கிழைக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். முதலில் இல்லறம் நடத்தும் ஸ்திரீகள் எம்.ஏ., பி.ஏ. முதலிய பட்டங்களை வகிப்பதே அசம்பாவிதமும், அநாவசியமுமான காரியம். இந்தப் பட்டங்கள் எல்லாம் உத்தியோகம் பெற ஆசைப்படுவோர் களுக்குத் தான் அவசியமானவை. ஏனென்றால், ஒருவன் இன்ன பரிட்சையில் தேறியிருக்கிறான் என்பது, எப்படி இருக்கிற தென்றால், கடையில் சாமான்களை பலவித நிறையில் பொட்டலம் கட்டி, இது அரை விசை, இது முக்கால் வீசை, இது ஒரு வீசை என்று மேலே விலாசம் எழுதி இருப்பது போல, ஒரு மனிதனுடைய அறிவு இவ்வளவு பெறுமானம் உள்ளது என்று சீட்டு ஒட்டுவது போன்றதாகிறது. அப்படிப் பட்டம் பெறுவது, அதை உபயோகப்படுத்தி உத்தியோகம் பெறுவதற்கே