பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மாயாவிநோதப் பரதேசி

அன்பு, க்ஷேமம், சுபிட்சம் முதலியவை பெருக, நாடு மேன்மை அடையும். நம்முடைய பண்டைகாலப் பெருமையும் கெடாது. மற்ற தேசத்துப் பெண்களுக்குக் கெல்லாம் நம் தேசத்துப் பெண்கள். உதாரணமாக விளங்குவார்கள். ஆண் பெண்பாலர் ஆகிய இருவகுப்பாருக்கும் சுகிர்தம். இதோ என்னுடைய அண்ணி இருக்கிறாளே. அவளை எடுத்துக் கொள்ளுவோம். அவள் எந்தப் பரிட்சையில் தேறிப் பட்டம் பெற்றிருக்கிறாள்? அவள் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவே இல்லை. தமிழ் மாத்திரம் படிப்பதற்குத் தானாகவே தெரிந்து கொண்டாளாம். அவளுக்கு இணை சொல்லக் கூடிய ஸ்திரீகள் இந்த உலகத்தில் வேறே யாரும் இருக்க மாட்டாள் என்பதே என்னுடைய அபிப்பிராயம். அவளுடைய புத்திக் கூர்மையும், வியவகார ஞானமும், அடக்கமும், பணிவுக் குணமும், உழைப்பும், குடும்பத்தை நடத்தும் திறமையும் இவ்வளவு அவ்வளவு என்று சொல்லி முடியாது. அவள் மற்றவரிடம் நடந்து கொள்ளும் அன்பிலும், பணிவிலும், மற்ற எல்லோருடைய மனசையும், பிரியத்தையும் அவள் காந்தம் போலக் கவர்ந்து எல்லோரும் அவளுக்கு அடிமையாகும் படி நடந்து கொள்ளுகிறாள். இன்னாரிடம் இன்னவிதம் நடந்து கொள்ள வேண்டும் என்ற விதரணையை மற்றவர் என் அண்ணி இடத்தில்தான் கற்றுக் கொள்ள வேண்டும். மாமன் மாமிமார்களிடத்தில் அவள் எவ்வளவு பயபக்தி விநயத்தோடு நடந்து அவர்கள் எள் என்பதற்குள் எண்ணெயாக நிற்கிறாள். புருஷனிடத்தில் அவள் நடந்து கொள்ளும் மாதிரி இருக்கிறதே, அதை மகாலக்ஷுமி விஷ்ணுவிடத்தில் நடந்து கொள்ளும் மாதிரி என்றே சொல்ல வேண்டும். அன்றி, சாதாரண மனிதருடைய செய்கைக்கு உவமானமாகச் சொல்ல முடியாது. அவள் ஏழையா? அவளுடைய தாய் தகப்பன்மாருக்கு அவள் ஒருத்தியே செல்வக் குழந்தை. அவர்களுக்கு இருக்கும் செல்வம் அளவிட முடியாத அபாரமான செல்வம். அப்படி இருந்தும், அவளுக்குக் கொஞ்சமாவது செருக்காவது, வீண் கெளரதை பாராட்டுவதாவது இல்லவே இல்லை. அப்படிப்பட்ட உத்தம பத்திகளே நம் தேசத்தில் பெருக வேண்டும் அன்றி, வெறும் பட்டம் பெற்று,