பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மாயா விநோதப் பரதேதி


ஆயினும் அவள் உருட்சி திரட்சியான அங்கங்களும், கட்டு மஸ்தான மேனி அமைப்பும் வாய்ந்தவளாய் இருந்தமையால், அவள் அப்போதே புஷ்பித்துப் புருஷர் முகத்தையே பாராத பதினான்கு அல்லது, பதினைந்து வயது மடந்தை போலக் காணப்பட்டாள். அவளது கைகால்கள் முதலிய ஒவ்வோர் உறுப்பும் மிகுந்த காந்தியும் கனிவும் மிருதுத்தன்மையும் கட்டழகும் பெற்று, காண்பதற்கு மொழுமொழுவென்று நிரம்பவும் வசீகரமாகக் காணப்பட்டது. ஆனாலும், அவளது மொத்தமான தோற்றம் அவள் அதிகப் பருமன் இன்றி பொற்கொடி போல இருப்பதாகக் காணப்பட்டது. அவளது முகம் அப்போதே மலர்ந்த செந்தாமரைப் புஷ்பம் போல முற்றிலும் மனோக்கியமாகவும், சாத்வீகம், நிஷ்கபடம், மனிதரிடம் இயற்கையான வாஞ்சை முதலிய சிரேஷ்ட குணங்களைக் காண்பிப்பதாகவும் அமைந்திருந்தது. அவள் அன்றைய தினம் முழுதும் கெம்புகளினால் ஆன ஆபரணங்களையே பாதாதி கேசம் வரையில் அணிந்திருந்தாள். அவளது மேனியில் ஊதா நிறச் சேலையும் ரோஜாநிற ரவிக்கையும் அழகு பெற்றுக் கொண்டிருந்தன. தந்தம் போலத் துல்லியமாகக் காணப்பட்ட அவளது உடம்பில், சிவப்பு, ஊதா முதலிய மாறுபட்ட பல நிறங்களைக் கொண்ட ஆடை ஆபரணங்கள் இருந்தமையால், அவளது எழில் வர்ணனைக்கு அடங்காத அதீதமான சிருஷ்டியைச் சேர்ந்ததாய்த் தோன்றியது.

அந்த அற்புத வசீகர மங்கையாவள் என்பதையும், அவளுக்கும் மாசிலாமணிக்கும் எப்படி சிநேகம் உண்டாயிற்று என்பதையும் தெரிந்து கொள்வது, நமது கதைப் போக்கிற்கு அவசியமான விஷயம் ஆதலால், அதை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். சட்டைநாத பிள்ளை பிரபல தசையடைந்திருந்த காலத்தில் வடிவாம்பாளை மாசிலாமணிக்குக் கலியாணம் செய்விப்பதற்காக, அவளை பலவந்தமாக மன்னார்குடியில் இருந்து அபகரித்து வந்ததாக நாம் முன்னரே படித்தோம் அல்லவா அந்தக் காலத்தில், அவர்களது மாளிகைக்கு எதிர்த்த வீட்டில் இன்னொரு