பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

195

தங்களுடைய விவரம் எதையும் எனக்குச் சொல்லாமல், தாங்க்ள் என்னைக் கலியானம் செய்து கொள்ள எண்ணுகிறீர்களென்று வேலைக்காரி சொன்னதை நான் நம்பவே இல்லை. இப்படிப் பட்ட மனிதர் என்ற விவரம் எதையும் அறிந்து கொள்ளக்கூடாத நிலைமையில் நான் இருந்தேன். இது எந்த ஊர், தாங்கள் யார் என்ற விவரங்களையும் எனக்குத் தெரிவிக்கக்கூடாதென்று தாங்கள் கண்டித்திருந்ததாகவும் வேலைக்காரி என்னிடம் சொன்னாள். அதைக் கேட்கவே, என்னுடைய திகிலும், கவலையும், மனக்கலக்கமும் ஆயிரமடங்கு அதிகமாய்ப் பெருகிவிட்டன. தங்களுடைய விவரம் எதையும் எனக்குச் சொல்லாமல், தாங்கள் என்னைக் கலியாணம் செய்து கொள்ள எண்ணுகிறீர்களென்று வேலைக்காரி சொன்னதை நான் நம்பவே இல்லை. இப்படிப் பட்ட விநோதமான கலியாணம் நம்முடைய நாட்டில் நடந்ததாக நான் கேள்வியுற்றது கூட இல்லை. பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும், சுற்றத்தாரும், நண்பர்களும், மற்ற ஜனங்களும் அறிய நடத்தும் சடங்கே கலியாணமென்று சொல்லத்தகுந்த தன்றி, இப்படி ரகசியமாகவும், பலாத்காரமாகவும் ஒரு சாராருடைய மனத்திற்கு விரோதமாகவும் பெண்ணைக் கொணர்ந்து வைத்துக் கொண்டு இந்தச் சடங்கை நடத்துவது நியாயப்படி கலியாணத் தில் சேர்ந்ததல்ல. புரோகிதர் கலியான மந்திரங்களைச் சொல்லு வதும், தாங்கள் என் கழுத்தில் தாலி கட்டுவதும் மாத்திரம் போதுமா? கொல்லத்துக்காரர்கள் நம்முடைய வீடுகளுக்குச் சுவர் வைக்கிறார்களே, எப்படி வைக்கிறார்கள்? வேகவைத்து பஸ்ப ரூபமாய் இருக்கும் சுண்ணாம்புத்துள் தண்ணினால் குழைத்துக் கொள்ளப்படுகிறது. காய்ந்து போயிருக்கும் செங்கல்லிலும் ஜலத்தை வார்த்து அதை நனைத்துக் கொண்டு கொல்லத்துக்காரர்கள் அதையும், சுண்ணாம்பையும் சேர்த்துச் சுவர் வைக்கிறார்கள். இரண்டிலும் நீர்ப்பசை இருந்தால்தானே அவை இரண்டும் ஒட்டிக்கொண்டு, ஒன்றுபட்டு, இறுகி சுவராய் மாறுகிறது. காய்ந்து கிடக்கும் செங்கல்லும், ஜலம் விடப் பெறாத சுண்ணாம்புத் தூளும் ஒட்டுமா? கொல்லத்துக்காரன் அவைக ளிரண்டையும் ஒன்றாய்ச் சேர்த்து வைத்துவிட்டு சுவர் ஆகிவிட்ட தென்றால், உண்மையில் அது சுவர் ஆகுமா? அதுபோல