பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

197

டைய தகப்பனாருக்கும் எங்களுக்கும் பகைமை உண்டாகையால், நான் அவளைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக அவரிடம் தெரிவிப்பது எனக்கு வெட்கமாக இருந்தது. அதுவுமன்றி, வெட்கத்தை விட்டு, நான் அவரிடம் அதைப்பற்றி பிரஸ்தாபித்தாலும் அவர் அதற்கு இணங்கி வரமாட்டார். ஆகவே, நான் அவளை பலவந்தமாக எடுத்து வர நேர்ந்தது. அப்படி எடுத்து வந்ததனால், நான் செய்த சடங்கு கலியாணத்தைச் சேர்ந்ததல்லவென்று சொல்லி விட முடியுமா? நான் ஒழுங்காக நடத்தும் இந்தக் காரியத்தைக் துராகிருத சம்பந்தமென்று நீ சொல்லிவிட முடியுமா? இந்த மாதிரி தாய் தகப்பன்மாருக்குத் தெரியாமல் பெண்ணை எடுத்து வந்து நம் முன்னோர்கள் கலி யாணம் செய்து கொண்டதாக நாம் புஸ்தகங்களில் படிக்கிறோம். அதெல்லாம் கலியாணத்தில் சேர்ந்ததல்லவா? அப்படிச் சேர்ந்த தம்பதிகள் உண்மையான புருஷன் பெண்ஜாதியல்ல என்று சொல்ல முடியுமா? அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் எல் லோரும் ஒழுங்கான தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள் அன்று என்று நினைத்துவிடலாமா? நீ சொன்ன செங்கல் சுண்ணாம்பு உவமானம் இதற்கு எப்படிப் பொருந்தும். அவை உயிரற்றவை. கொல்லத்துக்காரன் எவ்வளவுதான் பிரயாசைப்பட்டாலும் ஜலமாகிய பசையைச் சேர்க்காவிட்டால், அவை சேருவதில்லை. புருஷன் பெண் ஜாதியின் சேர்க்கை அவ்விதமானதல்ல. ஆரம்பத்தில் பெண்ணுக்கு இஷ்டமில்லாது இருக்கலாம். புருஷனோடு பழகப் பழக காலக் கிரமத்தில் அவனிடம் பிரியமும், பற்றும் ஏற்பட்டுப்போகு மல்லவா? அப்போது அவர்களிருவருக் கும் பந்தம் ஏற்பட்டுவிடுமல்லவா?

போலி மணப்பெண்:- ஏற்படலாம். அது பெண்ணின் மனவுறுதியையும் மனப்போக்கையும் பொருத்த விஷயம். பெண் உத்தம ஜாதிப் பெண்ணாக இருந்தால், தன்னை இவ்வளவு காலம் வளர்த்து ஆளாக்கியவர்களும், பேசும் தெய்வங்கள் போல இருப்பவருமான தாய் தகப்பன்மாருக்குப் பகைவரான புருஷரை அவர்களும் கடைசிவரையில் பகைத்து. வெறுப்பதே நியாயம், அதைவிட்டு, அவர்கள் அந்தப் புருஷருடைய பாந்தவ்