பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

மாயா விநோதம் பரதேசி

உடனே தனது உணர்வை இழந்து செயலற்றவனாய் மாறிவிட்டான். அந்த முரடர்கள் அவனை எடுத்துப் போய் மோட்டார் வண்டியில் வைத்த பின்னரும் மயக்க மருந்தை அவனது மூக்கிற்கருகிலேயே பிடித்துக் கொண்டிருந்தனர் ஆதலால், அன்றைய தினம் விடியற்காலம் அவர்கள் கும்பகோணம் போய்ச்சேரும் வரையில் அவன் உயிரற்றவன் போலவே அலங்கோலமாக வீழ்ந்து கிடந்தான். இடும்பன் சேர்வைகாரன் முதலிய முரட்டு மனிதர்கள் பங்களாவில் இருந்து அவனைத் தூக்கிக் கொண்டு போய் மோட்டாரில் வைத்த காலத்தில், யாராவது மனிதர்கள் தோன்றி, தங்களைத் தடுத்து எதிர்த்தால், தாம் கருதி வந்த காரியம் பலிதமடையாமல் போய் விடுமே என்ற கவலையும் பெரும் பீதியுமே குடிகொண்ட மனத்தினராய் இருந்தனர் ஆதலால், தாம் தூக்கிக் கொண்டு போவது ஒரு வேஷதாரி என்பதை அவர்கள் சிறிதும் சந்தேகிக்க அவகாசம் நேரவில்லை. அதன்பிறகு, அவனை அவர்கள் மோட்டாரில் கோஷா ஸ்திரிகளுக்கான அறை போலவே அமைக்கப்படும் மறைவிற்குள் படுக்கவைத்திருந்தனர் ஆதலால், அதற்குள் இருளே மயமாக நிறைந்திருந்தது பற்றி, அப்போதும், அவனை அவர்கள் உற்றுநோக்க சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அது நிற்க, மனோன்மணியை மாசிலாமணி மணம் புரிந்து கொள்ளப் போகிறான் என்ற எண்ணம் அவர்களது மனதில் இருந்தது ஆதலால், தங்களது எஜமானனுக்காக உத்தேசிக்கப் பட்டிருந்த பெண்ணின் தேக அமைப்பைத் தாங்கள் விஷமப் பார்வையாகப் பார்ப்பது ஒழுங்கல்ல என்ற நினைவையும் அவர்கள் கொண்டிருந்தார்கள் ஆதலால், அவனுக்கு எதிரில் இருந்து மயக்க மருந்தைப் பிடித்துக் கொண்டிருந்த இடும்பன் சேர்வைகாரனைத் தவிர மற்றவர்கள் தூரத்தில் இருந்தனர். அவ்வாறே, அவர்கள் விடியற்காலம் கும்பகோணத்திலிருந்த மாசிலாமணியின் மாளிகை வாசலை அடைந்த காலத்தில், யாராவது போலீசார் தங்களைக் கண்டுகொள்ளப் போகிறார்களோ என்ற திகிலையும், பொழுது விடிந்து போய்விடுமோ என்ற கவலையையும் கொண்டு முற்றிலும் பதறிய வண்ணம் அவனைத் தூக்கி எடுத்து அவனுக்காக மூன்றாவது மாடத்தில்