பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

மாயா விநோதப் பரதேசி

இருந்தன. தன்னை வஞ்சித்துப் போன பெண் தனது ரகசியத்தை வெளியிடவில்லை என்றும், அவளும் தனது பகையாளிகள் இடத்தில் விரோதம் கொண்டவள் என்றும் நிச்சயித்துக் கொண்டான். தனது கோரிக்கை முழுதும் தான் உத்தேசித்தபடியே நிறைவேறிப் போனதை நினைத்து நினைத்து மாசிலாமணி உவகை பூத்துக் கட்டிலடங்காத களிவெறி கொண்டு, அன்றைய தினம் பதினாயிரம் ரூபாய் செலவு செய்து, தேவாலயங்களில் அபிஷேகம், அர்ச்சனை நிவேதனம் முதலியவற்றை நடத்தி வைத்து ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திர தானம் முதலியவற்றை வழங்கி பூத உடம்போடு சுவர்க்கலோகம் புகுந்தவன் போல பசி, தாகம், அயர்வு, நித்திரை முதலிய எந்த தேக பாதையையும் உணராமல் ஆனந்தமயமாய் அன்றைய பொழுதைப் போக்கினான்.

மறுநாளாகிய திங்கட்கிழமைத் தபாலிலும் சில சமாசாரப் பத்திரிகைகள் வந்தன. இராஜாங்க சம்பந்தமாய் ஏதோ விசேஷமான சம்பவம் நடந்ததைக் கருதி, ஞாயிற்றுக்கிழமை தினம் ஒரு பிரத்தியேக அநுபந்தம் வெளியிடப்பட்டது ஆகையால், அது மாசிலாமணிக்கும் வந்து சேர்ந்தது. வேலாயுதம் பிள்ளை முதலியோரை அங்கஹீனப் படுத்தி பிறகு இடும்பன் சேர்வைகாரனும் அவனுடைய ஆட்களும் தப்பித்து வந்து விட்டார்களோ, அல்லது, போலீசாரிடம் எவராவது அகப்பட்டுக் கொண்டார்களோ என்பதை நிச்சயித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் மாசிலாமணியின் மனதில் ஒரு புறத்தில் வதைத்துக் கொண்டிருந்தது ஆகையால், அவன் அன்றைய தினம் வந்த அநுபந்தத்தை எடுத்துப் பிரித்து விஷயங்களை மேன் போக்காகப் பார்த்துக் கொண்டே போக, அதில் காணப்பட்ட ஒரு விஷயம் அவனது மனதைக் கவர்ந்தது. அவன் அதை உடனே படிக்கத் தொடங்கினான். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

முக்கியமான ஒரு பிழை திருத்தம்
(ஒரு -நிருபர் எழுதுகிறார்)

மகா கோரமான ஒரு சம்பவம் என்ற தலைப்பின் கீழ் வெளியான ஒரு விஷயத்தை எல்லோரும் படித்திருக்கலாம். விரிவான