பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

253

தனியாய்ப் போகிறீர்களே. உங்களுக்கு வேண்டிய சொந்த மனுஷ்யாள் யாருமில்லையா?

விதவையம்மாள்:- (திரம்பவும் விரக்தியோடு பேசத் தொடங்கி) எனக்கு நெருங்கிய பந்துக்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்; எனக்குப் பிறகு என்னுடைய சொத்து சுதந்திரங்களை எல்லாம் அவர்கள் அடையக் கூடியவர்களே அன்றி, என்னுடைய ஜீவிய காலத்தில் எனக்கு உதவி செய்யக்கூடிய சொந்தக்காரர் எனக்கு ஒருவரும் இல்லை. கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட இவ்வளவு பெரிய உலகில் பிறருடைய கஷ்டங்களையும் விசனங்களையும் தம்முடையவையாக எண்ணி இரங்கக்கூடிய புண்ணியாத்து மாக்கள் எந்த இடத்திலும் இருக்கிறார்கள் எந்த ஊரிலும் இருக்கிறார்கள். வழிப்பறி நடத்தும் கள்வருடைய கும்பலில்கூட நீதிநெறி தவறாமல் நடக்கும் யோக்கியன் ஒருத்தன் இருப்பான். மகா கொடிய அரக்கர்களான இராவணன் கும்பகர்ணன் முதலியோர் இராஜ்யபாரம் செய்த மகா பயங்கரமான தேசத்தில் நடுநிலை தவறாத புண்ணியவானான விபீஷணன் ஒருத்தன் இருந்தான் அல்லவா? நம்முடைய தேசத்தில் எப்படி புண்ணிய கூேடித்திரங் கள் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கின்றனவோ, அது போல, பரோபகாரச் சிந்தை வாய்ந்த புண்ணியாத்துமாக்களும் எங்கே பார்த்தாலும் ஏராளமாக நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் தான் என்னுடைய நெருங்கிய பந்துக்கள். அவர்கள் செய்யும் உதவியில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட சொந்தக்காரர்கள் செய்யமாட்டார்கள். நம்மிடம் பணம் இருந்தால், அதை எப்படி அபகரிக்கலாம் என்று சொந்தக்காரர்கள் சதியாலோசனை செய்வார்கள். எனக்கு எப்போதும் சிநேகிதர்களும், வழிப்போக்கர்களும் தான் உதவி செய்கிறார்கள். சொந்தக்காரர்கள் என்னைக் கொன்றுவிட்டு என்னுடைய சொத்துகளை எல்லாம் அபகரிக்க வழி தேடுகிறார்கள். ஆகையால் நான் சொந்தக்காரர்களுக்கு மத்தியில் இருப்பதை விட்டு, இப்படி தேசயாத்திரை புறப்பட்டுவிட்டேன். இப்போது நீங்கள் தான் இருக்கிறீர்கள். உங்களுக்கும் எனக்கும் இதற்கு முன் பழக்கமில்லை. இப்போது எனக்கு ஏதாவது துன்பம் நேரிட்டால் நீங்கள் என்னைக் கைவிட்டு விடுவீர்களா? அல்லது, நான் பசியினால் துன்பப்படுகிறேன் என்றால், எனக்கு ஒரு கவளம்