பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

259

அம்சங்கள் எல்லாம் பொருந்திய ஊர்கள் இதுவரையில் இரண்டு தான் என் மனசில் பட்டன.

ர. தாய்:- அவை எந்தெந்த ஊர்?

விதவையம்மாள்:- ஒன்று திருச்சிராப்பள்ளி, இன்னொன்று கும்பகோணம்.

ர. தாய்:- பேஷ் பேஷ் இரண்டும் நல்ல ஊர்தான். இரண்டிலும் காவிரியாறு போகிறது. இரண்டிலும் தேவாலயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்த இரண்டு ஊர்களுக்குள் எது சிரேஷ்டமானது என்பதை நீங்கள் நிச்சயிக்க வேண்டிய வேலை ஒன்று தான் பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது.

விதவையம்மாள்:- அந்த வேலையும் அநேகமாய் முடிந்து போன மாதிரிதான்.

ர. தாய்:- ஓகோ! அப்படியானால், இரண்டில் எந்த ஊரில் இருக்க முடிவுகட்டி இருக்கிறீர்கள்?

விதவையம்மாள்:- முதலில் திருச்சிராப்பள்ளி தான் என் மனசுக் குப் பிடித்தமாகத் தோன்றியது. ஏனென்றால், அந்த இடத்தில் காவிரியாற்றின் அழகு இவ்வளவென்று சொல்லி முடியாது. ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தில் அது எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஒவ்வொரு நாளும் சிவாலயத்திற்குப் போய் ஈசுவர தரிசனம் செய்ய வேண்டும் என்று ஒரு பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறேன். அந்த ஊரில் ஈசுவரன் மலையின் மேல் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் மலையின் மேலேறி இறங்கு வதற்கு என்னால் சாத்தியப்படாது. ஆகையால், நான் அந்த ஊர் ஆசையை விட்டுவிட்டேன். முடிவாகக் கும்பகோணத்தில் தான் இருக்க உத்தேசம். ஆனால், அதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அந்த ஊரில் நான் இருப்பதற்கு நல்ல ஜாகையும், பழகுவதற்கு நல்ல மனுஷ்யாளும் வாய்க்க வேண்டும். அதைப்பற்றித் தான் இப்போது இரவு பகல் கடவுளை பஜித்துக் கொண்டே இருக்கிறேன்.

ர. தாய்:- நல்ல மனுஷ்யாளுக்கு அவர்களுடைய கோரிக்கையின் படியேதான் எல்லாக் காரியமும் கைகூடும். உங்களுடைய