பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மாயா விநோதப் பரதேசி

மாசிலாமணி:-எவரையும் இங்கே கொண்டு வரவேண்டியதில்லை. எல்லோரும் ஒருவருடைய அழகை இன்னொருவர் பார்த்து கொண்டு சந்தோஷமாக அவர்களுடைய வீட்டிலேயே இருக்கட்டும்.

இடும்பன்சேர்வைகாரன்:சரி; வடிவாமபாளுடைய மூக்கு அறுபட்டுப் போனதென்றே வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கண்ணப்பாவை என்ன செய்கிறது?

மாசிலாமணி:- அவர்களுடைய குடும்பத்திற்குக் கண்ணப்பாவே முக்கியஸ்தன் அல்லவா. எந்த விஷயத்திற்கும் அவனே ஓடியாடி எல்லா நிர்வாகத்தையும் நடத்தித் தனக்கு நிகரானவர் யாரும் இல்லை என்று நினைத்து மிகுந்த இறுமாப்பு அடைந்திருக்கிறான். ஆகையால் அவனுடைய கண்கள் இரண்டையும் கத்தியால் குத்திப் பெயர்த்து அவனைக் குருடனாக்கி வீட்டிலேயே உட்கார வைத்து விடவேண்டும். அப்படிச் செய்தால் அவன் வீட்டை விட்டு வெளியில் போகவே முடியாமல் போய்விடும். அது அவன் இறந்ததைவிட மகா கேவலமான நிலைமையாக இருக்கும். ஆனால் ஒரு விஷயம் அவனுடைய கண்கள் போய்விட்டால், மூக்கில்லாமல் கொண கொண வென்று பேசும் தன் பெண்ஜாதியான வடிவாம்பாளின் முகத்தழகை அவன் கண்டு ஆனந்தம் அடைய முடியாமல் போய்விடும். அப்படிப் போனாலும் பாதகம் இல்லை. வடிவாம்பாள் உத்தம பத்தினியல்லவா? அவள் அவனை எப்போதும் விடாமல், கோல் கொண்டு நடத்தி அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்யட்டும்.

இடும்பன் சேர்வைகாரன்:- இதையும் அந்த சவரன் கத்தியைக் கொண்டே சுலபத்தில் முடித்து விடலாம். அப்புறம் வேலாயுதம் பிள்ளை இருக்கிறாரே. அவருக்கு ஏதாவது மரியாதை நடத்த வேண்டாமா?

மாசிலாமணி:- அவர் அந்த வீட்டுக்கே பெரியவர் அல்லவா.அவருக்கு மரியாதை செய்யாமல் இருக்கக்கூடாது. ஆனால் அவர் வயதான மனிதர். பெருத்த அங்கஹீனம் ஏதாவது