பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

89

ஆகவே, பட்டாபிராம பிள்ளையும் போலீசாரும் சேர்ந்து விருந்தாளியாக வந்தவர்களைத் தனித்தனியான இரண்டு இடங்களில் அடைத்துப் பூட்டி வைத்திருந்தனராம். அன்றைய தினம் இரவு 12-மணி சமயம் இருக்குமாம். சுமார் 15 முரட்டாள்கள் திடீரென்று பங்களாவில் நுழைந்து பட்டாபிராம பிள்ளை காவல் காரர்கள் வேலைக்காரிகள் முதலிய எல்லோரையும் அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு மேன்மாடத்திற்குப் போய், அவ்விடத்தில் ஓர் அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த விருந்தாளிப் பெண்பிள்ளையான யௌவன ஸ்திரீயை விடுவித்துக் கொண்டு போய்விட்டார்களாம். அவர்கள் போன இடத்தைக் கண்டுபிடிப்பதற்குரிய எவ்வித தகவலும் கிடைக்க வில்லை. விருந்தாளியாக வந்தவர்கள் தம்மோடுகூட அழைத்து வந்த வேலைக்காரப் பெண்பிள்ளையும் காணப்படவில்லை. அவளையும் முரட்டு மனிதர்கள் அழைத்துக் கொண்டு போனார்களா என்பதும், அல்லது, இரவில் ஏற்பட்ட சந்தடியில், அவளே தப்பித்து வெளியில் ஓடிப்போய் விட்டாளோ என்பதும் தெரியவில்லை. ஆனால் இதில் இன்னொரு முக்கிய சங்கதியும் நடந்திருக்கிறது. விருந்தாளியாக வந்த இருவருள் பெண்பிள்ளை மாத்திரம் விடுவிக்கப்பட்டாளே அன்றி, ஆண்பிள்ளையாகிய யௌவனப் புருஷன் இரவில் இருளில் நடந்த சச்சரவில், கலெக்டருடைய ஆள்களினாலோ அல்லது, வந்த முரடர்களினாலோ பலமாக அடிபட்டு மயங்கி ஸ்மரணை தப்பிக் கீழே வீழ்ந்து கிடந்தார். அவர் இறந்து போய் விட்டதாகக் கருதி ஒருவேளை, முரடர்கள் அவரைப் போட்டு விட்டுப் போயிருக்கலாம் எனத் தோன்றுகிறது. காலையில் போலீசார் வந்து எல்லோருடைய கட்டுகளையும் அவிழ்த்து விட்டதன்றி, ஸ்மரணை தப்பிக் கிடந்த விருந்தாளி ஆண் பிள்ளையை வைத்தியசாலைக்கு எடுத்துப் போயிருக்கிறார்கள். அவருக்குப் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னம் அவர் பேசக்கூடிய நிலைமையை அடையவில்லை. அவர் அநேகமாய்ப் பிழைக்கமாட்டார் என்றே வைத்தியர்கள் சொல்லுகிறார்கள். அவர் வாயைத் திறந்து பேசி உண்மையை வெளியிட்டால் அன்றி, இந்த அதிசயச் சம்பவத்தின் உள்