பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 39 அவன் சரேலென்று எழுந்து உட்கார்ந்து வணக்கமாகவும், மரியாதையாகவும், விநயமாகவும் மறுமொழி கூறத் தொடங்கி, "எனக்குத் தூக்கம் வரவில்லை. பகலெல்லாம் ஓயாமல் நின்றத னால் கால் கடுப்பெடுத்துக் கொண்டது; அதனால் இப்படிக் கொஞ்சம் படுத்தேன்" என்றான். அதைக் கேட்ட சாயப்பு அவனது வணக்கத்தையும், மரியாதையையும் கண்டு, அவனிடம் ஒருவித அபிமானமும், அன்பும் கொண்டவராய், "ஒகோ சரி, அப்படியானால் படுத்துக் கொள்ளும். உம்மைப் பார்த்தால் தக்க பெரிய மனிதராயும், யோக்கியதா பட்சமுடையவராயும் தெரிகிறது. உம்மை ஏன் இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்? அபாண்டமாக என்னை இந்தப் போலீசார் கொண்டு வந்து இங்கே வைத்திருப் பதை எண்ண எண்ண, அநேகமாய் இவ்விடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் என்னைப் போலவே அக்கிரமமாக அடைபட்டிருப் பவர்கள் என்றே நினைக்கிறேன். என்ன குற்றத்திற்காக உம்மைப் போலீசார் இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்? நீர் எப்போதும் இருப்பது இந்த ஊர்தானோ?" என்றார். அவ்வாறு அவர் நிரம்பவும் அனுதாபத்தோடும், தான் குற்றமற்றவன் என்ற நல்ல அபிப்பிராயத்தோடும் பேசியதைக் கேட்ட இடும்பன் சேர்வைகாரன் மிகுந்த குதூகலமும் ஆறுதலும் அடைந்து, "சாயப்பு ஐயா! அந்த அக்கிரமத்தை என்னவென்று சொல்லுவேன். நான் இருப்பது கும்பகோணம். ஒரு கலியான விஷயமாக நான் இங்கே வந்தேன். வந்து. ராமசாமி முதலியார் சத்திரத்தில் நான் எங்கள் ஊர் மனிதர்களோடு தங்கியிருந்த காலத்தில் இராத்திரி படுத்திருக்கையில் ஒரு பெண் பிள்ளையின் கை விரலில் இருந்த மோதிரத்தை நான் திருடி விட்டேன் என்று அபாண்டமாக என்மேல் குற்றம் சுமத்தி போலீசார் என்னை இங்கே கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள். இந்த வழக்கு எப் போது விசாரனைக்கு வரும் என்பதும் தெரியவில்லை. எனக்கு உதவி செய்யக்கூடிய மனிதர்கள் யாரும் இந்த ஊரில் இல்லை. என்னுடைய சொந்த ஊராகிய கும்பகோணமாய் இருந்தால், எனக்கு உதவி செய்ய ஏராளமான மனிதர்கள் வருவார்கள். ஆயிர