பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 91 என்னுடைய இந்த திக்கற்ற நிலைமையில் நீங்கள் இந்த உதவி செய்தால், உங்களுக்குப் பெருத்த புண்ணியம் உண்டாகும். ஆண்டவன் உங்களுக்கு எவ்வித குறைவையும் வைக்க மாட்டார்" என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினான். அதற்கு மேல் அவர்கள் அதிகமாய் ஒருவரோடொருவர் பேசாமல் அவ் வளவோடு சம்பாஷணையை நிறுத்திக் கொண்டு அப்போதைக் கப்போது லோகாபிராமமாய் ஏதோ இரண்டொரு வார்த்தைகள் சொல்லியபடி இருந்து அப்படியே படுத்துக் கொண்டு துயின்று அந்த இரவைப் போக்கினார்கள். மறுநாள் காலையில் பாராக் காரர்கள் வந்து வழக்கப்படி அவர்களை வெளியில் அழைத்துக் கொண்டு போய்த் திருப்பி அழைத்து வந்து அவ்விடத்தில் அடைத்தனர். இடும்பன் சேர்வைகாரனுக்குக் காலை ஆகாரம் சர்க்காரால் கொடுக்கப்பட்டது. சாயப்புவுக்கு முதல் நாளைப் போல வெளியிலிருந்து சொந்த ஆகாரம் வந்தது. அதை அவர் உட்கொண்ட பின் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்தவராய்க் கம்பிக் கதவண்டை போய் நின்று கொண்டிருந்தார். கால் நாழிகை காலத்தில் அவரும் வந்து சேர, இருவரும் ஒருவருக்கொருவர் சலாம் வைத்து அன்னியோன்னிய மாய்ப் பேசத் தொடங்கினர். சப் இன்ஸ்பெக்டர் கம்பிக் கதவின் வெளிப் பக்கத்திலும், சாயப்பு உள் பக்கத்திலுமாய் நின்று காதோடு ரகசியமாய் அரை நாழிகை சாவகாசம் சம்பாவித்திருந் தனர். அந்த சம்பாஷணையில் ஒரு வார்த்தைகூட இடும்பன் சேர்வைகாரனுக்குக் கேட்கவில்லை. சப் இன்ஸ்பெக்டர் தமது சம்பாஷணையை முடித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு உடனே போய் விட்டார். சாயப்பு கம்பிக்கதவை விட்டு அந்த அறையின் கோடிக்குப் போய் நின்று சைகை செய்து இடும்பன் சேர்வைகாரனை அழைக்க, அவர் தனக்கு ஏதோ விசேஷச் செய்தி சொல்லப்போகிறார் என்ற ஆவல் கொண்டவனாய் அவன் விரைவாக அவரிடம் போய் நிரம்பவும் வணக்கமாகவும் மரியாதை யாகவும் அடங்கி ஒடுங்கி நின்றான். உடனே சாயப்பு, "ஐயா! என்னை ஜாமீனில் விடும்படி இவர்கள் சிபார்சு செய்து விட்டார்களாம். இன்று மத்தியானம் 12 மணிக்குள் மாஜிஸ்டிரேட்டின் உத்தரவு கிடைத்துவிடும். நான் உடனே இவ்விடத்தை விட்டுப் போய் விடுவேன். இப்போது