பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 超拉憩” விநோதப் பரதேசி வந்த சப் இன்ஸ்பெக்டரிடம் நான் உம்மைப் பற்றியும் பேசினேன். அவர் சொல்வதைப் பார்த்தால், நீர் உண்மையி லேயே திருட்டுக் குற்றம் செய்தவர் என்று நினைக்கும்படியாகத் தான் இருக்கிறது. உம்மை இவர்கள் பிடித்ததற்கு மறுநாள் உமக்கு பேதி மருந்து கொடுத்து உம்முடைய வயிற்றிலிருந்த மோதிரத்தை வெளிப் படுத்தினார்களாமே. அப்படி இருக்க, இவர்கள் அபாண்டமாக இதைக் கற்பனை செய்திருக்கிறார்கள் என்று நாம் எப்படி நினைக்கிறது" என்றார். இடும்பன் சேர்வைகாரன் நிரம்பவும் பரிதாபகரமான குரலில் "சாயப்பு ஐயா! ஆண்டவன் அறியச் சொல்லுகிறேன். நான் அந்த மோதிரத்தைத் திருடவே இல்லை. மறுநாள் இவர்கள் எனக்குப் பேதி மருந்து கொடுத்தது நிஜமே; அப்போது மோதிரம் வெளிப் பட்டதாக இவர்கள் சொல்லுகிறார்களே யன்றி, அதை நான் பார்க் கவே இல்லை. நான் வெளிக்குப் போய் வந்த பிறகு போலீசார் போய்ப் பார்த்து மோதிரத்தை அங்கே போட்டிருக்க வேண்டுமே யன்றி, பிரமாணமாக நான் திருடவே இல்லை" என்று அழுத்த மாகக் கூறினான். அதைக் கேட்ட சாயப்பு அதை இன்னதென்று தீர்மானிக்க மாட்டாமல் சிறிது நேரம் தவித்தவராய், "ஐயா! நீர் பேசுவதைப் பார்த்தால், உண்மை போலவே படுகிறது. அவர்களும் ருஜூ வோடு இந்த வழக்கை ஜோடித்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் நிலைமையில், இந்தத் திருட்டுக் குற்றத்திற்காக உமக்கு குறைந்தது ஆறுமாத காலத்திற்காவது கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்று சப் இன்ஸ்பெக்டர் சொன்னார். அதுவுமன்றி இன்னொரு பெரிய சங்கதியும் சொன்னார். இந்த ஊரில் கலெக்டர் ஒருவர் இருக்கிறாராம். அவருடைய பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்களாம். அதற்காக மன்னார்குடியில் இருந்து பிள்ளை வீட்டார் வந்து கோம ளேசுவரன் பேட்டையில் இறங்கி இருந்தார்களாம். அவர்களுக்கு கும்பகோணத்தில் யாரோ பகைவர் இருக்கிறார்களாம். அவர்களால் அனுப்பப்பட்ட ஆள்கள் வந்து இரவில் வீட்டிற்குள் புகுந்து கலியானத்திற்கு வந்திருந்த மனிதர்களுடைய காது, மூக்குகளை எல்லாம் அறுத்து பெருத்த