பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 93 அக்கிரமம் நடத்தி விட்டார்களாம். அவர்களுள் சிலர் பிடிபட்டு இந்தச் சிறைச்சாலை யின் முதல் கட்டில் வைக்கப் பட்டிருக்கிறார்களாம். அவர்களைப் போலீசார் அடித்துக் கேட்டதில், நீர்தான் அவர்களை அழைத்து வந்தீர் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்னே தான் அவர்கள் ஒப்புக் கொண்டார்களாம். அந்த விஷயத்தில் உம்மேல் மகா விபரீதமான குற்றம் வந்து சுமருவது நிச்சயம் என்றும், அதற்காகவே இந்தத் திருட்டு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற தென்றும் சப் இன்ஸ்பெக்டர் சொன்னார். இதை எல்லாம் கேட்டவுடனே, நாம் உம் விஷயத்தில் செய்ய எத்தனிக்கும் உதவி பிரயோஜனப்படா தென்று தோன்றிவிட்டது. ஆனாலும், நான் துணிந்து சப் இன்ஸ்பெக்டரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து, நீர் கும்ப கோணத்தில் உள்ள யாருக்காவது கடிதம் எழுதி பணம் வருவித்துக் கொடுப்பதானால், அவர் அதை வாங்கிக் கொண்டு, உம்மை மெதுவாய்த் தப்பவைத்துவிட முடியுமா என்று கேட்டுப் பார்த் தேன். போலீஸ் கமிஷனருக்குப் பதினாயிரம், மற்ற போலிஸ் சிப்பந்திகளுக்கெல்லாம் ஐயாயிரம் ஆக பதினைந்து ஆயிரம் ரூபாய் பெயருமானால், உம்மை நிரம்பவும் தந்திரமாகத் தப்ப வைத்து விடுவதாகச் சொல்லுகிறார். உம்முடைய அபிப்பிராயம் என்ன? சீக்கிரம் சொல்லும். நான் இனி அதிக நேரம் இங்கே இருக்கமாட்டேன். அடுத்த நிமிஷத்தில் என்னை விட்டுவிட உத்தரவு வரக்கூடும்" என்றார். இடும்பன் சேர்வைகாரன் மிகுந்த கலக்கமும், திகிலும் கொண்டு சிறிது நேரம் ஆழ்ந்து யோசனை செய்தான். தன் மீது போலீசார் ஏற்படுத்தப் போகும் குற்றங்களில் தான் தப்புவது கூடாக் காரியம் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. ஆகையால், போலீசார் கேட்கும் தொகையை தான் மாசிலாமணியிடம் கேட்டு வாங்கிக் கொடுத்து தப்பிப் போவதே உசிதமாகப்பட்டது. ஆகவே, அவன் சாயப்புவை நோக்கி, "சாயப்பு ஐயா! நான் உண்மையில் குற்றம் செய்தேனோ இல்லையோ, அது ஆண்டவனுக்குத்தான் தெரிய வேண்டும். போலீசார் சொல்வதிலிருந்து அவர்கள் எனக்கு எப்படியும் தண்டனை செய்து வைப்பார்கள் என்பது நிச்சயமாகத் தோன்றுகிறது. அவர்கள் கேட்கும் தொகை பெரிய தொகையாக