பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மாயா விநோதப் பரதேசி இருக்கிறது. இந்த ஊரில் எனக்கு ஒரு செல்லாக் காசுகூடப் - பெயராது. கும்பகோணத்தில் உள்ள என் சிநேகிதர் ஒருவருக்கு எழுதி அந்தத் தொகையை வரவழைத்துத்தான் கொடுக்க வேண்டும். அதை நான் எப்படி வரவழைக்கிற தென்பதுதான் தெரியவில்லை. என் சிநேகிதருக்கு நான் ஒரு கடிதம் எழுதுகிறேன். அதை யாராவது தபால் பெட்டியில் போட் டால், அது அவரிடம் போய்ச் சேர்ந்து விடும். அவர் உடனே பனத்தோடு வந்து சேருவார். அவ்வளவு தூரத்திற்கு நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றார். அதைக் கேட்ட சாயப்பு சிறிது நேரம் யோசனை செய்து, "சரி, அப்படியே செய்து உம்முடைய சிநேகிதரைப் பணத்தோடு வரவழைத்து காரியத்தை முடிப்பதே உசிதப்படுகிறது. ஆனால், நீர் சொல்லுகிறபடி கடிதத்தை தபாலில் போடுவது பிசகு, அது தவறினாலும் தவறிப் போகும். இந்த அவசர வேளையில் அது அவரிடம் போய்ச் சேராமல் போனால், காரியம் கெட்டுப் போகும். கடிதத்தை ரிஜிஸ்டர் செய்வதும் பிசகு, அதுவே, பின் னால், உமக்கு விரோதமான சாட்சியாக முடிந்தாலும் முடியும். ஆகையால், இந்த விஷயத்தில் நான் உமக்கு ஒர் உதவி செய்கிறேன். நீர் கடிதம் எழுதி என்னிடம் கொடும். நான் என்னுடைய ஆளிடம் அதைக் கொடுத்து, இன்றைய இராத்திரி ரயிலிலேயே அவனை அங்கே அனுப்பி, நேரில் கடிதத்தைக் கொடுக்கும்படி செய்கிறேன். அவரே பணத்தோடு நேரில் புறப்பட்டு வருவதே நல்லதென்றும், அல்லது, தடுக்க முடியாத ஏதாவது அசந்தர்ப்பத்தினால், அவர் நேரில் வர முடியாவிட்டால், பணத்தை அந்த ஆள் வசமே கொடுத்தனுப்பலாம் என்றும் நீர் எழுதி விடும்" என்றார். இடும்பன் சேர்வைகாரன் அதற்கிணங்க, சாயப்பு தமது சட்டைப் பையில் இருந்த காகிதம், பவுண்டன் பேனா முதலியவற்றை எடுத்துக் கொடுக்க, அவன் அதை வாங்கி மாசிலாமணிக்கு சுருக்கமான கடிதம் ஒன்று எழுதினேன். அபாண்டமாகத் தன் மேல் ஒரு திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், அவன் பதினையாயிரம் ருடாயோடு உடனே புறப்பட்டு நேரில் வர