பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்

53

வளர்த்துக் கொள்ளத் தேவையான வழிகளைத் தேடுவான். (லெனின்)

பொதுமை வாழ்க்கையில் எத்தனையோ வகைகளில் தனி மனிதன் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடலாம். இதனைப் பலவகையான படிமங்களாக உருவாக்கலாம்.

தியோடோர் டிரீஸர் என்னும் அமெரிக்க நாவலாசிரியர் அமெரிக்க ஏகபோக முதலாளித்துவத்தின் கொடுமைக்குள்ளான ரொபர்ட்டா என்னும் பெண்ணின் வாழ்க்கையையும், கிளைட் என்ற இளைஞனின் வாழ்க்கையையும், 'அமெரிக்கன் டிராஜடி' என்ற தனது நாவலில் சித்திரிக்கிறார். கிளைடின் குணங்களின் வளர்ச்சியையும் அவனது சமூகத் தொடர்புகளையும் ஆசிரியர் ஆராய்கிறார். கிளைடின் இளமை, சமுதாயத்தினால் தூண்டப்படும் அவனது ஆர்வங்கள், அதனால் அவனது மனித நேசம் அழிந்து அவன் தன்னால் நேசிக்கப்படும் பெண்ணையே கொலை செய்தல் என்ற கதைப் பொருளை அவர் மூன்று பகுதிகளில் சித்திரிக்கிறார்.

முதல் பகுதியில் கிளைடின் மனப்போக்கு உருவாகிறது. சமுதாய உறவுகளால்தான் அவனது தனித்தன்மை உருவம் பெறுகிறது. ஒரு கார் விபத்தில் கிளைட் ஒரு பெண்ணைக் கொன்றுவிடுகிறான். போலீசிற்குப் பயந்துகொண்டு அவன் கான்ஸாஸ் நகரத்திற்குப் போய்ச் சேருகிறான்.

இரண்டாவது பகுதியில், அவன் வேலை தேடி அலைவதும், அப்பொழுது அவன் அனுபவிக்கும் துன்பங்களும் வருணிக்கப் படுகின்றன. ஒரு பெரிய தொழில் முதலாளியின் ஆதரவு அவனுக்குக் கிடைக்கிறது. இனி வாழ்க்கை நிலைப்படும்போலத் தோன்றுகிறது. இப்பொழுதுதான் ரொபர்ட்டா என்னும் பெண் அவனது வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். இது இரண்டாவது காதல். முதல் காதல் தோல்வியாயிற்று. விலையுயர்ந்த பரிசுகளை முதலில் தான் காதலித்த பெண்ணுக்கு அளித்திருந்தான். ஆனால் அவள் உள்ளம் திருப்தியடையாமலேயே இருந்தது. அவளோடு ஒப்பிடும்பொழுது ரொபர்ட்டா நல்லவளாகத்தான் இருந்தாள். ஆனாலும் கிளைடின் மனத்தில் புதிய சூழ்நிலையில் தோன்றிய ஆசை காரணமாக அவளை மணக்க விரும்பவில்லை. அவள் உணர்ச்சி மிக்கவளாகவும் இனிமை யானவளாகவும் இருந்தாள். ஆனால் சமூகத்தின் மேல்தட்டில் ஓர் இடம் பிடிக்க அவன் ஆசைப்பட்டான். இதற்குத் தகுந்த ஒரு பெண்ணை அவன் மணம் செய்துகொள்ள ஆசைப்பட் டான். 'லொன்ட்ரா' மேல்தட்டு வாழ்க்கையின் நிறை உருவமாக அவனுக்குத் தோன்றினாள். அவள் உணர்ச்சியேயில்லாத-