பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரபும் மாற்றமும்

75

உரிமையளிக்கிறது' என்ற கோட்பாட்டை எதிர்த்த, சமூக ஆதிக்க எதிர்ப்பு வீரன் விபீஷணன்.

கிருஷ்ணனது நடுநிலைமையை ஒத்தது, நவீனத்துவவாதிகளின் நடுநிலைமை. கிருஷ்ணன் ஆயுதம் தாங்கவில்லை. ஆனால் நெருக்கடி நிலைமைகளில் பாண்டவர்கள் பக்கமே சார்பு கொண்டுள்ளான்.

ஒவ்வொரு நாட்டிலும் வரலாற்று நிலைமைகள், சமூக வர்க்கங்களின் வளர்ச்சியில் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் வளர்ச்சி எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. எந்த வளர்ச்சிக் கட்டத்தில், எந்த வர்க்க உறவு நிலைகளில் ஒரு நாடு இருக்கிறதோ அதற்குத் தக்க இலக்கியம் தோன்றும். தேசிய இலக்கியம் சோசலிச ரியலிசக் கொள்கைக்கு முரண்பட்டதன்று.

நீக்ரோவ எழுத்தாளர்கள் ஆப்பிரிக்க நீக்ரோக்கள் சமூக நிலையையும் ஒதுக்கல் கொள்கையையும் எதிர்க்கிறார்கள், சமூக வளர்ச்சியில் பல படிகளைத் தாண்டி, நீக்ரோவ சமூகம் முன்னேற வழிகாட்டுகிறார்கள். டிபாய் என்ற அமெரிக்க நீக்ரோவ எழுத்தாளர், நீக்ரோவ நாகரிக வளர்ச்சியை ஆராய்ந்து, அதன் வரலாற்றை எழுதி, நீக்ரோவர்கள் முன்னேறுவதற்கான வழி, உலகப் பாட்டாளி மக்களின் விடுதலை இயக்கத்தில் நீக்ரோவ அடிமை எதிர்ப்புப் போராட்டத்தை இணைப்பதும் சோஷலிசக் குறிக்கோள்களுக்காகப் போராடுவதுமே என்று எழுதினார். ஹோவார்ட் ஃபாஸ்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர், அமெரிக்காவில் அமெரிக்க நீக்ரோவர்கள் விடுதலைப் போராட்டம் பற்றி இலக்கியம் படைத்தார். அமெரிக்கா, சிவப்பு இந்தியர்களை ஒதுக்குப் புறங்களுக்கு விரட்டிய கொடுஞ் செயல்களை வருணித்துக் 'கடைசி எல்லை' என்ற நாவலையும் அவர் படைத்தார். தாழ்ந்த நாகரிகங்களை அழித்து நாசம் செய்கிற அமெரிக்க முதலாளித்துவத்தை அவர் தயக்கமின்றிக் கண்டித்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தோடு தொடர்பு கொண்ட நாவல்கள் பலவற்றைச் சமூக உணர்வோடு எழுதிய இந்திய எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். தெய்வ பக்தியைத் தேசபக்தியாக உயர்த்திய பெருமை பாரதி, தாகூர் ஆகிய கவிஞர்களுக்கு உண்டு. விடுதலையின் பொருளை மக்களுக்குத் தெளிவாக்கியவர் பாரதி. தேச பக்தியோடு, சமூக உணர்வையும் இணைத்தவர் பாரதி. தமிழிலக்கியத்தில், இந்திய முதலாளித்துவம் அரசியல் விடுதலை பெற்று ஆளும் வர்க்கமாக மாறுவதற்கு முன்னரே, அவர்களது சார்பில் நின்று இலக்கியம் படைத்த எழுத்தானர்கள் இன்று நவீனத்துவவாதிகளாகவும் பாலுணர்வு எழுத்-