பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே உழைக்கும் வர்க்கங்களை அடக்கி உபரி உழைப்பைப் பெறுவதில் இவ்வரசு அக்கறை கொண்டிருந்தது. முதலாளி வர்க்கம் உழைக்கும் வர்க்கங்களை ஒடுக்குவதற்கான ஒரு வன்முறை யந்திர மாக அது இருந்தது. ஆனல் வெளித் தோற்றத்தில் ‘சுதந்திரமானதாக தன்னைக் காட்டிக் கொண்டது. அனைத்து மக்கள் வாக்குரிமையை தான் அளித்த மாபெரும் நன்கொடையாக, தனது ஆதரவாளர் மூலம் பிரகடனப்படுத்தி தன்னை ஒரு மக்கள் அரசு என்று அறிவித்துக் கொண்டது. ஆயினும் தற்காலத் தில் மக்கள் போராட்டங்களின் எழுச்சியால், முத லாளித்துவ அரசுகள் எந்த வர்க்கத்திற்காக பணி புரிகின்றன என்பது, அதன் அடக்குமுறைச் சட்டங் களாலும், வன்முறைக் கொடுமைகளாலும் தெளி வாக வெளியாகிவிட்டது. பாட்டாளி வர்க்கப் புரட்சியினுல் பாட்டாளி கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது அப்பொழுது இருக்கும் அரசாங்க யந்திரத்தை என்ன செய்ய வேண்டும்? இவ்வினுவிற்குரிய விடையை லெனின் தமது அரசும் புரட்சியும்’ என்ற நூலில் தெளிவாகவே விளக்கியுள்ளார். இந்நூற்ருண்டில், 1917 அக்டோபருக்குப் பிறகு பல நாடுகளில் தொழிலாளி வர்க்கம் புரட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற பின்னர் முதலாளித்துவ அரசை அந் நாடுகளின் பாட்டாளி வர்க்கம் எவ்வாறு பயன்படுத்தியது? லெனினுடைய போதனைகளையும், அப்போதனைகளின் அடிப்படை யைப் பின்பற்றி வரலாற்று நிலைமைகளுக்கேற்ப கம்யூனிஸ்டுக் கட்சிகள் செயல்பட்ட முறையினையும் நாம் அறிந்து கொண்டால்தான் மேற்கண்ட விணு விற்கு விடை காணமுடியும். எனவே வெற்றி பெற்ற பாட்டாளி வர்க்கம் பூர்ஷாவா அரசு பற்றி என்ன கொள்கையைக் கைக்கொள்ள வேண்டும்? லெனி 5 9