பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-: * * - ‘. . fo - செயல்பாடுகளால் ஆபத்து வரும்போது தொழி லாளி வர்க்கம் பிற வர்க்கங்களோடு ஒன்றுபட்டு நின்று தலைமைத்தாங்கி அப்போக்குகளைத் தடுத்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் வேண்டும். இதுவே தனது வர்க்க நலன்களையும் தொழிற் சங்க உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி யாகும். பூர்ஷ்வா ஜனநாயகம் முதலாளிகளால் பிற வர்க்கங்களுக்கு அளிக்கப்பட்ட தாராளமான நன் கொடை அல்ல. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர மான உரிமைப் போராட்டங்களின் வெற்றியாகவே முதலாளித்துவ ஜனநாயகத்தைக் காணவேண்டும். ஜனநாயகத்தின்மூலம் தொழிலாளி வர்க்கம் தனது பொருளாதார அரசியல் போராட்டங்களை நடத்து வதற்கு வாய்ப்புக்களைப் பெறுகிறது. இதனுல் ஒவ் வொரு நாட்டிலும் தொழிலாளி வர்க்கம் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுகிறது. "ஜனநாயகத்திற்காகப் போராடாமல் பொது மக்களை சோஷலிஸ்ட் புரட்சிக்கு ஆதரவாகக் கொணர முடியாது’ என்று லெனின் கூறியுள்ளார். எனவே ஏகபோக முதலாளித்துவத்தின் சுரண்டவை யும் அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடுகிற பாட்டாளி வர்க்கமும் அதன் மார்க்ளtய லெனி னியக் கட்சிகளும் முதலாளித்துவ ஜனநாயக சுதந் திரங்களைப் பயன்படுத்திப் போராடுகிறது. இத் தகைய சுதந்திரங்களை விஸ்தரித்துக் கொள்ளவும் போராடுகிறது. இத்தாலியிலும், பிரான்ஸிலும் கம் யூனிஸ்ட் கட்சிகள் பார்லிமெண்டில் அதிக எண் ளிைக்கையுள்ள உறுப்பினர்களைக் கொண்டு மக்க ளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து முறியடித் துள்ளன. அது மட்டுமல்லாமல் மக்களுக்கு நன்மையான பல சட்டங்களை பார்லிமெண்டிற்கு வெளியேயுள்ள மக்கள் இயக்கத்தின் சக்தியாலும், இ {{}}