பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வர்க்க சமுதாய அமைப்புகள் ஆரம்பத்தில் நீண்ட நெடுங்காலமாக மனித சமுதாயம் புராதன கம்யூனிச சமுதாயமாக இருந்தது. அப்பொழுது உபயோகப்படுத்தப்பட்ட உற்பத்திக் கருவிகள் எல்லாம் மிகப் பிற்போக் கானவை. முன்னேற்ற மடையாதவை. கற்கருவி கள். வெறும் பாறையாக இல்லாமல், நீண்ட கல் லாக, உபயோகத்திற்குத் தகுந்த கல்லாக இருக்கும். அவ்வளவுதான். நம் தமிழ் நாட்டையே இதற்கு உதாரணமாகக் காட்டலாம். தமிழ் நாட்டில் எவ் வளவு காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வாழ்ந் தார்கள் என்பதை வரையறுத்துக் கூற இயலாது. ஆனல் இத்தனை வருடங்களுக்கு முன்னல் மனிதன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிந்து சொல்லியிருக்கின்ருர்கள். தமிழ் நாட் டிற்கு வந்து பழங்கால மக்கள் உபயோகித்த கருவி களையும், அவர்களது எலும்புகளையும் தோண்டி யெடுத்து ஆராய்ந்தறிந்த அறிஞரின் பெயர் புருஸ் புட் என்பதாகும். இவர் சென்னையருகிலுள்ள பல்லாவரம் எனும் ஊரில் அகழ்ந்து எடுத்து ஒரு எலும்பைக் கண்டு பிடித்தார். அது சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனுடையது என்று அவர் ஆராய்ந்து கூறினர். அதைத் தொடர்ந்து அவரது மாணவர்களில் பலர் செங்கல் பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏராளமான எலும்புகளைக் கண்டு பிடித்துள்ளனர். இத்தோடு கருவிகளும் கிடைத்துள்ளன. ஒரு குறிப்பிட்டி ஆழத்தில் கிடைக்கும் கருவி அதே ஆழத்தில் கிடைக் கும் எலும்புக்கூடு மனிதன் உபயோகித்த கருவி, எனக் கணக்கிடலாம், இந்தியா முழுவதும் , போன்ற கற்கால மனிதர்கள் வாழ்ந்த அ! ----- கள் கிடைத்துள்ளன. பண்டைக்காலம்

  1. 9.