பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் நிலப்பரப்புகளைப் பிடித்து விவசாயம் செய் வதற்கு வாய்ப்பாக சாம்ராஜ்யங்கள் விஸ்தரிக்கப் பட்டன. அடிமை முறையில்_எகிப்து, ஆசிரியா போன்ற சிறு சிறு ராஜ்யங்கள் தோன்றின. ஆளுல், நிலவுடைமை சமுதாய அமைப்பில் அரசர்களுக் கிடையில் நடைபெற்ற திருமணங்கள் மூலமாகவும், பெரும் போர்கள் மூலமாகவும் சாம்ராஜ்யங்கள் விஸ்தரிக்கப்பட்டன. போர் மூலம் சாம்ராஜ்யங்கள் விஸ்தரிக்கப்பட்டதற்கு இந்திய இலக்கியங்கள் சான்று தருகின்றன. சந்திர குப்த மெளரியன், கரி காலன், ராஜராஜசோழன் போன்ருேர் போர்களின் வெற்றியின்மூலம் நிலவுடைமை அமைப்பை நிலை நாட்டினர். திருமணங்கள் மூலம் ஆட்சி விஸ்தரிக்கப் பட்டதற்கு சீவக சிந்தாமணி போன்ற நூல்களும் பிற இலக்கியங்களும் சான்று பகர்கின்றன். நில உடைமை அமைப்பின் மிக முற்போக்கான அம்சம் தண்ணிரை மிக அதிகமாகப் பயன்படுத்தி யதே. நதிகளுக்கிடையில் பெரும் அணைகளைக் கட்டி நீரை விவசாயத்திற்கு பயன்படும்படியாக வழிப் படுத்தினர். காவிரியில் கல்லணை கட்டப்பட்டது, கங்கையிலும் பிற நதிகளிலும் அணைகள் கட்டப் பட்டன. (கங்கை நதியையே பூமிக்கு கொண்டு வந்தவன் என்று சகரன் என ஒரு பெயர் புராணத் தில் காணப்படுகிறது. சாகரம்-கடல்; கடல்போல நீரைக் கங்கையில் தேக்கியவன் சகர ன் என தெய்வத் தன்மை சுமத்திக் காட்டப்பட்டிருக் கிறது.) இது மனித முயற்சியை மிகைபடக் கூறிய தேயாகும். இவனைப்போன்ருேர் தண்ணீரைத் தேக்க அணைக்கட்டியவர்களே. இந்தக் காலத்தில் நாட்டின் பரந்த பகு இணைக்க சாலைகள் அமைக்கப்பட்டன. வியாபாரம் வளர்ந்தது. வியாபாரப் போட்டிகளில்ை நாடுகளக் 懿