பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடையில் போர்கள் நடைபெற்றன. ஆனல் போரில் யார் வென்ருலும், மையமான நிலவுடைமை அமைப்பு மாறவில்லை; பாதுகாக்கப்பட்டது. தமிழ் நாட்டில் சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், கங்கர், ஆயர், கோசர், ஹோப்சளர், பல்லவர் போன்ற பல அரசகுலங்களுக்கிடையில் போர்கள் நடைபெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மதுரையில் ஆண்ட பாண்டி - சோழன் வென்றதாக ஒரு கல்வெட்டு கூறும். ஆளுல் நான்கு வருடங்களுக்குப் பிறகு பாண் டிய வம்சத்தைச் சார்ந்த மற்ருெரு மன்னன் மதுரையை ஆண்டதாக மற்ருெரு கல்வெட்டு கூறுகிறது. அதா வது எத்தனே போர்கள் நடந்தாலும் நிலப்பிரபுத் துவ அரசாங்க அமைப்பு மாறவில்லை. தோல் வி யடைந்த மன்னனே தனது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொண்டு, அவனது நாட்டை அவனையே ஆளச்செய்து மொத்த அமைப்பு முறையை மாரு மல் காத்துவந்த நிலைதான் இருந்திருக்கிறது. இவை யெல்லாம் நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சி நில்ை. ஆளுல் இதிலும் ஒரு கட்டத்தில் தேக்க நிலை ஏற்பட்டது._நிலவுடைமை அமைப்பில் உற்பத்தி அதிகரிக்கும்போது மனிதனின் அறிவும் வளர்ந்தது. விஞ்ஞானமும் வளர்ந்தது. இவை மட்டுமின்றி போக்குவர்த்து வசதிகள் பெருகின. வியாபாரம் பெருகி வளர்ந்தது. இம்மாதிரி வளர்ச்சியினல், புதி தாக ஒரு வர்க்கம் தோன்றியது. அதிகமான நிலத் திற்கு சொந்தமாகி உற்பத்தியை முதலாக்கிய பெரும் பணக்காரர்கள், வியாபாரத்திற்கு கட னுதவிசெய்த பணக்காரர்கள். இவர்கள் அனைவரும் விஞ்ஞான அறிவினுல் அனைவரும் பெற்ற கருவி களின் உதவியுடன் தொழிற்சாலைகளை உருவாக்கி னர். வேகமாக வளர்ந்த விஞ்ஞான அறிவு நீராவி யின் உபயோகத்தைக் கண்டு பிடித்தது. நீராவியின் 32