பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனும், இயந்திரக்கதிர்களும் சேரும்போது மிகப் பெரிய பஞ்சாலைகள் உருவாயின. கப்பல்களில் நீராவி பயன்படுத்தப்பட்டன. ரயில்கள், விமானங் கள், கப்பல்கள்-போக்குவரத்து வசதிகள் அதிகமா யின. உற்பத்தியாகும் பொருள்களை உலகமெங்கும் கொண்டு சென்று வாழ்வதற்குரிய வாய்ப்பும், வசதி யும் பெருகின. ஆனால் இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்பது நிலவுடைமைச் சமுதாய அமைப்பு. ஆதன் சட்டங்கள், மரபுகள், கோட்பாடுகள் முதலியன. ஆளும் உரிமை நில வுடைமை வர்க்கத்தின் பிரதிநிதிகளான அரசினிடம் இருந்ததால், அரசுக்குக் கட்டுப்பட்டே தொழில் முதலாளிகள், தமது முயற்சிகளை நடத்திக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. எனவே தொழில் முதலாளிகள், தமது நலன்களின் மீது அக்கறை யில்லாத, தமது முயற்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக் கின்ற நிலவுடைமை அமைப்பு முறையை மாற்றி விடவேண்டும் என்ற நிலைக்கு இயற்கையாகவே வருகின்றனர். உற்பத்தி சக்தியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட வர்க்கம், அச்சக்திகளைத் தடுக் கும் அமைப்பை அகற்ற முன்வந்தது. - முதலாளிகளின் தொழில் முயற்சிகளுக்குத் தேவைப்பட்ட கச்சாப் பொருள்கள் நிலப்பிரபுக் களிடமிருந்து பெற வேண்டியிருந்தது. தொழிற் சாலைகளுக்குத் தேவையான தொழிலாளர்கள் நிலப் பிரபுக்களின்கீழ் கட்டுப்பட்டு விவசாயிகளாக இருந் தனர். உற்பத்தியான தொழிற்சாலையின் பொருள் க%ா விற்பனை செய்வதற்காக சந்தை, போக்கு வரத்து வரி போன்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் நிலப்பிரபுக்களால் ஆளப்பட்டன. எனவே தொழில் முதலாளிகள் நிலப்பிரபுத்துவ அமைப்பை உடைத் தெறியாமல் தமது நலன்களைக் காப்பாற்றிக் torr. Gastr-3 33