பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் ஈடுபட்டுள்ளனர். ஏகபோக வளர்ச்சியிஞல் சுரண்டலின் தீவிரம் அதிகரித்துள்ளதால், சொந்த தொழில்கள் நடத்திவந்த பல சிறு தொழில் உடைமையாளர்கள். உடைமையிழந்து பாட்டாளி களாகியுள்ளனர். தொழில் வளர்ச்சியடைந்த முத லாளித்துவ நாடுகளில், தொழிலாளி வர்க்கத்தினுள் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. 1. இயந்திரத் தொழில் பாட்டாளிப் பிரிவு. 2. விவசாயத் தொழில் பாட்டாளிப்பிரிவு. 3 வியாபாரத் தொழில் பாட்டாளிப்பிரிவு, Á વ્યભુિ జ్వా - o به سر ~(~~ 1. இய்ந்திரத் தொழில் பாட்டாளிப்பிரிவு இப்பிரிவில் உற்பத்தி தொழில்களிலும், கட்டிடம், போக்குவரத்து, செய்தி போக்குவரத்து, (தபால் தந்தி) ஆகியவை அடங்கும். முனிசிபல் தொழில்கள் (வாயு, நீர் வினியோ கம்) முதலிய பெரு இயந்திரத் தொழில்களில் கூலி பெறும் உழைப்பாளிகளாக பணிபுரிகிறவர்கள் பெரிய அளவு உற்பத்தியில் துடுபட்டிருப்பதால் சமு தாயத்தின் உபரி மதிப்பில் பெரும்பான்மைப் பகுதி யைப் படைப்பவர்கள். இப்பகுதி ஸ்தாபன அமைப் பிலும், வர்க்க உணர்விலும், ஒற்றுமையிலும், பிற தொழிலாளிப் பகுதிகளைவிட மிக உயர்ந்த நிலையில் உள்ள்து. அதனுல் தொழிலாளி வர்க்கத்தின் செயல் மையமாக, பிறரை ஒன்றுபடுத்தி இணைக்கும் தலைமை யாக இப்பகுதி செயல்படுகிறது. எல்லா உழைக் கும் மக்களின் போராட்டங்களில் இவர்களே முன் ன்னிப் படையாக செயல்படுகிரு.ர்கள். கம்யூனிஸ் டுக் கட்சிகளின் அடித்தளமும், மூலபலமும் இப் பகுதியாகத்தான் இருக்கவேண்டும். 45