பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்து ஈடுபட்டு வந்துள்ளது. தற்காலத்தில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெருத தொழிலே கிடையாது. உலக ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் பரவலான அளவில் நடைபெறுகின்றன. தொழிலாளி வர்க்க நலன் களையும், ஒற்றுமையையும் .ெ பா ரு ள | த | ர ப் போராட்டங்கள் பாதுகாக்க உதவுகின்றன. ஆயி னும் இவற்ருல் மட்டும் முதலாளித்துவ சமுதாய்த் தின் அடிப்படைகள் நொறுங்கி விடுவதில்லை. சோஷலிஸ் உணர்வு தொழிலாளி வர்க்கத்தில் தோன்றும்போதுதான் பொருளாதாரப் போராட் டம், அரசியல் போராட்டமாக மாற்றம் பெறு கிறது. அப்பொழுது தொழி லா ளி வர்க்கம் பூர்ஷ்வா வர்க்கத்தோடு, வர்க்கங்கள் என்ற நிலை யில் ஒன்றையொன்று முழுமையாக எதிர்த்து நிற் கின்றன. அரசியல் போராட்டங்களே வர்க்கப் போராட்டத்தின் பிரதானமான வடிவமாகும். மற். றெல்லாப் போராட்டங்களும் அரசியல் போராட் டத்திற்கு அடங்கிய முக்கியத்துவ முடையவை தான். மார்க்சிஸ்டு லெனினிஸ்டுக் கட்சிகளின் தலைமையில், தொழிலாளி வர்க்கம், முதலாளித்துவ சட்டங்களையும் எதிர்த்து தனது சுதந்திரங்களுக் காகப் போராடுகிறது. தனது உரிமைகளை விஸ் தரித்துக் கொள்ளவும், முடிவில் அரசியல் அதிகா ரத்தைக் கைப்பற்றவும் போராடுகிறது. தொழி லாளி வர்க்கத்தின் போராட்டங்கள், அரசியல் சீர் திருத்தங்களுக்காக அல்லாமல் அரசியல் அதிகாரத் தைப் பெறுவதற்கான நோக்கமுடையதாக இருந் தால்தான் அது புரட்சிகரமான போராட்டமாக இருக்கும். தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்றுவது வரலாற்றுப் போக்கின் 5i