பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவிர்க்க முடியாத நிகழ்ச்சி என்பதை உணர வேண் டும்’ என்ற கருத்தே மார்க்சீய லெனினிஸத்தின் புரட்சிகரமான முடிவாகும். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் குறிக்கோள் களேயும், கடமைகளையும் தெளிவாக உணர்த்துகிற லெனினுடைய பின்வரும் வாசகத்தை மார்க்சிஸ்டுலெனினிஸ்டுகள் கருத்தில் கொள்ள வேண்டும். 'வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பவர்கள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்லர். அவர்கள் முதலாளித்துவ அரசியல் சிந்தனையுடையவர்களாக இருக்கலாம். மார்க்சீயத்தை வர்க்கப் போராட்டம் என்ற கருத்தமைப்புக்குச் சுருக்கி விடுவது, மார்க் சீயத்தின் பரப்பைச் சுருக்குவதாகும். இது ஒரு திரி பாகும். இதை முதலாளிகள்கூட ஒப்புக் கொள்ளு வார்கள். மார்க்சிஸ்டு என்ற பெயருக்குத் தகுதிபெற வேண்டுமானுல் ஒருவர், வர்க்கப் போராட்டத்தை ஒப்புக்கொள்வதோடு. பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் மார்க்ளிஸ்டு சிந்தனைக்கும், குட்டி - பூர்ஷாவா சிந்தனைக்குமுள்ள வேறுபாடு. ’’ வர்க்கப் போராட்டத்தின் மூன்ருவது அரங்கம் தத்துவார்த்தப் போராட்டமாகும். இ ன் னு ம் தொழிலாளி வர்க்கம் உள்பட மக்கள் மனத்தில் ஆதிக்கம் செலுத்துவது முதலாளித்துவக் கருத்துக் களும், கருத்தமைப்புகளுமாகும். அவற்றை எதிர்த்து சோஷலிஸ்டு கருத்தமைப்பை தொழிலாளி வர்க்கத் தின் மனத்தில் புகுத்துவதும், மார்க்சீய சிந்தனையை அவர்கள் மனத்தில் வளர்ப்பதும், கொள்கைப் போராட்டம் அல்லது தத்துவார்த்தப் போராட் டம் எனப்படும். தொழிலாளி வர்க்கத்தின் நலன்கள், கடமை கள், குறிக்கோள்களையும் பற்றிய விஞ்ஞானக் 52