பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1940ஆம் ஆண்டிற்குப் பின், ஏகாதிபத்திய ஆட்சி யிலிருந்து விடுதலை பெற்றுள்ளன. அவை விடுதலை பெறுவதற்கு அரை நூற்ருண்டிற்கு மேல் தமது சிறந்த புதல்வர்களை விடுதலைப்பீடத்தில் பலி கொடுத்துப் போராடியுள்ளன. இப்போராட்டங் களின் விளைவாக ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ச்சி அந்நாட்டு மக்களிடையே பெரிதும் வளர்ந்துள்ளது. விடுதலை பெற்ற நாடுகளில், வர்க்க அமைப்பு, வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடுகளில் உள்ளது போல இல்லை. விடுதலை பெற்றுள்ள நாடுகளில்கூட வர்க்க அமைப்பு ஒரே மாதிரியாக இல்லை. இதற்குக் காரணம் அந்நாடுகளின் வேறுபட்ட வரலாற்று வளர்ச்சியாகும். இந்நாடுகளில் நிலப்பிரபுத்துவ, அடிமைச்சமுதாய எச்சங்கள் இன்னும் காணப்படு கின்றன. அவற்ருேடு வளரும் முதலாளித்துவ வர்க்க உறவுகளும் உள்ளன. இந்நாடுகளில் ஒவ்வொரு வர்க்கத்தின் எண்ணிக்கையும், வர்க்க உறவுகளும், வர்க்கங்களின் சமூகப் பாத்திரங்களும் வேறுபடுகின்றன. பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் (சிலி, அர்ஜென்டைனு, பொலிவியா, பெரு எண் னிக்கையில் அதிகமான தொழிலாளிகளைக் கொண் டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் தொழில் வளர்ச்சி பின் தங்கியிருப்பதால், ஆரம்பத்தில் முதலாளித் துவ வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் பலவீன மாக உள்ளன. ஆளுல் தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகப்பட்டு வரு கிறது. மாலி போன்ற சிறிய நாடுகளில் இயந்திரத்' தொழிலே இல்லாததால் முதலாளி வர்க்கமோ தொழிலாளி வர்க்கமோ இல்லாதஇந்த நிலங்கள்குழு வுடைமையாக உள்ளன. குழுத்தலைவர்களது சுரண் டலும், வட்டிச் சுரண்டலும் வியாபாரச் சுரண்ட லும் உள்ளன. இங்கு படித்த அறிவாளி வர்க்கம் சமுதாய மாறுதலுக்குத் தலைமைத் தாங்கி உழைப் 签穆