பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்ட்டின் ஆர்தரின்

7. ஏழுமலை மீதுள்ள சோமா,சி

ஒரு பூலோக நரகம்:

அகுஸ்தின் கடத்திற்கு மேல் விசாரணைக் குருவாகம் பணியாற்றிய ஜான் ஸ்தெளபிட்ஸ் என்ற பக்த சிரோன் மணிக்கும், மடச்சாமியார் ஏழு பேருக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அந்த மனமாச்சர்யம், இரு சாரார்களுக்கும் இடையே பெரும் பிளவை நாளுக்கு நாள் வளர்த்து விட்டது. இந்தப் பிரிவினைக் குழப்பம் மேலும் நீடிக்கக் கூடாது என்று எண்ணிய சிலர், மார்ட்டின் லூதரை நடுநிலை :ாளராகத் தேர்ந்தெடுத்தார்கள்

மார்ட்டின் லூதர் ரோமாபுரி சென்று இந்த இரு வேறு குழுவினரின் கருத்து முரண்பாடுகளை போப்பிடம் எடுத்துக் கூறி எது நியாயம் என்பதைத் தெரிந்து வர அவர்கள் லூதுரைத் தேர்வு செய்தார்கள்.

பழம் நழுவிப் பாவில் விழ, அது நழுவி வாயில் விழுந்த டோல், ரோமாபுரிக்குப் போக முடியுமா என்று கொண்டிருந்த மார்ட்டின் லூதருக்கு அகுஸ்தின் மடத்துச் சாமியார்கள் தகராறு ஒரு நல்ல வாய்ப்பாகவே அமைந்தது.

மார்ட்டின் லூதர் கி.பி. 15:0ம் ஆண்டில் ரோமாபுரிக்கு புண்ணிய பயணத்தை ஆரம்பித்தார். இந்தப் பயணத் தைத் துவக்கி, இமயமலை உயரம் போன்ற ஆல்ப்ஸ் மலை தொடரைக் கடந்து இத்தாலிய சமவெளிப் பகுதியை அடைந்தார்.

போகும் வழியில் உள்ள மடங்களில் எல்லாம் தங்கித் தங்கிச் சென்றார். சில மடங்களில் லுத்தர் கண்ட காட்சி