பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் அண்ணங்கள் 55

கன். அவர் அண்தை எறிவிங்டி ஏத்தித் தாக்குவன வோன் இருந்தன.

பெனிடித்தீன் என்ற ஒர் இத்தாலிய மடித்தில் அதே தங்கினார். அந்த மடத்து அறைகள் எல்லாம் பளிங்கக் கற்களால் அழகுபடுத்தப்பட்டு இருந்தது.

சாமியார்கள் எல்லாம் பட்டுத் துணிகளை அணிந்து கொண்டு, ஆணவத்துடனும் அகங்காரத்துடனும் அங்கும் இங்கும் ஆடம்பரமாக அலைந்து திரிவதையும் லூதர் கண்டார்! திடுக்கிட்டார்!

வெள்ளிக்கிழமை அன்று உணவுண்ணும் மேசையில் இறைச்சித் துண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் கொதித்தெழுந்தார் போப்பும், திருச்சயை யும் செய்யும் இது போன்றச் செயல்களைக் கண்டித்து, அவற்றை விலக்கிட வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

லூதர் அந்த மடத்தை விட்டு வெளியேறினார்; மீன் டும் ரோமாபுரிப் பயணத்தைத் தொடர்ந்து போலோக்னா நகர் மடம் வந்தார் அங்கே அவருக்கு உடல் நலமின்மை ஏற்பட்டது. சுகம் பெற்ற பிறகு மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இறுதியில் நீண்ட நாட் களுக்குப் பின்னர் ரோமாபுரியை அடைந்தார்.

ஏழு குன்றுகள் மீதுள்ள ரோமாபுரி திருநகரைக் காலால் நடந்து சென்றே சுற்றிப் பார்த்தார்: இனிமேல் தனக்கு தற்காலம் பிறக்கப் போகிறது என்று மகிழ்ச்சி அடைந்தார்! பயபக்தியுடன், மரியாதையுடன் ரோமாபுரி நகர் திருக்காட்சியைக் கண்டுப்பூரித்துப் பரவசப்பட்டார்.

ரோமாபுரி நகருக்குள் ஒரு பக்தன் நுழைவதைப்போல உள்ளே நுழைந்தார் மார்ட்டின் லூதர். ரோமைக் கண்ட அவர் பூலோக சொர்க்கத்தைக் கண்டவர்போல இகயம் பூசித்தார்.