பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மார்ட்டின் லூதரின்

தலைமை குருவான போப் துருவின் அரண்மனையில் அவரது காலடி பட்டபோது, ஏதோ மோட்ச வாசலுக்கு ஒருவன் சென்றால் என்ன பய பக்தியோடும், மரியாதை யோடும், பரவசத்தோடும் அடக்கமாக அமைதியாக ஒழுக் கமே உருவான உணர்வுகளுடன் செல்வானோ, அவனைப் போல மார்ட்டின்லு:தரும் சென்றார்.

ஆனால், டோப் அரண்மனையில் லூதர் கன்டி ஆடம் பரம், ஆரவாரம், படாடோப அலங்காரம், பணச்செருக்கு, அதிகார ஆணவம் அனைத்தையும் பார்த்த லூதருக்குப் பெரும் ஆச்சரியமே தோன்றிவிட்டது

போப் அரண்மனையிலே நடிக்கும் ஆக்கிரமச் செயல் களைக் கண்டு திடுக்கிட்டார். ஏழைகளுக்கு அருள் பாவிக் கும் இடமா? அல்லது பணக்காரர்களுக்குப் பாதம் தாங்கும் பளிங்கு மண்டபமா என்று திகைத்துப் போனார்:

போலிப் பக்தியும், போப்பாண்டவரின் தன்லயாட்டி பொம்மைகள் ஆதிக்கமும், மக்களை ஏமாற்றும் பாய்மால வெளிவேஷமும், உயர்வு தாழ்வுப் பேதங்களின் செருக்கும் அங்கே கோரத் தாண்டவமாடினதைக் கண்டு மனம் பொறுமினார்:

ரோமாபுரியில் அப்போது இரண்டாம் ஜூலியஸ் என்பவர் போப் ஆண்டவராக இருந்தார். லுத்தர் அந்த போப்பைச் சந்திக்க வந்தபோது, பிரான்ஸ் நாட்டின் மீது போப் போர் தொடுத்திருந்தார்! அதனால், மார்ட்டின் லூதர் கொண்டு வந்த அகுஸ்தீனிய மடத்தின் வழக்குகளை விசாரிக்கப் போதிய நேரமில்லை.

இருப்பினும், லூதர் கொண்டுவந்த வழக்குகளை மேல் விசாரணை செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். அதுவரை ரோமாபுரியிலே இருந்த அகுஸ்தீனிய மடத்தில் அவர் தங்கி இருந்தார். ஓய்வு நேரங்களில் ரோமாபுரியின் முக்கிய இடங்களையும்,