பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 35

உலகெங்கும் ஆல்போல் தழைத்து விட்டது, உலகமெலாம் சுவிசேஷத் திருத்துதர்கள் சென்று. இயேசு பெருமான் அருள்மொழியான, நீங்கள் உலகமெங்கும் சென்று, சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" என்பதற்கு ஏற்றவாறு சுவிசேஷ அருளொளியை ஏந்தி ஊதியம் செய்து வருகின்றார்கள்.

1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9ம் தேதி சீகன்பால்க் என்ற பாதிரியும், புளுட்சோ என்ற பாதிரியும் லூதர் கிறித்துவப் பிரிவு சார்பாக, லுத்தரன் மிஷனெரியாக தமிழ்நாட்டிலே உள்ள தரங்கம்பாடியில் வந்திறங்கி னார்கள்.

தமிழ்நாட்டுப் பண்பாடுகளை ஆழமாக ஊன்றி அறிந்து தமிழ்கற்று தங்கள் பெயர்களோடு ஐகர் என்ற சொல்லை சேர்த்து சீகன்பால்க் ஐயர், புளுட்சே ஐயர் என்றும் பெயர் மாற்றி, இங்குள்ள மக்களுக்கு இயேசு பெருமானை பற்றிப் பிரச்சாரம் செய்து, தமிழர்களையும் கிறித்தவர் களாக மாற்றினார்கள்.

தமிழ் மக்களுக்குப் பரிசுத்த வேதாகமத்தை தமிழ் மொழியிலே மொழி பெயர்த்து இச்சிட்டு வழங்கிய பெருமை லூதரது திருச்சபைக்கும் அதன் திருத் தொன் டர்களுக்குமே சாரும். -

மார்ட்டின் லூதரது, கத்தரீனாள் தம்பதிகளுக்கு மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் பிறந்த ர்ை. இவர்களில் இரண்டு.பெண் குழந்தைகள் இறந்து விட்டார்கள். மற்ற நால்வர்களும் மார்ட்டின் லூதருக்குப் பிறகும் உயிர் வாழ்ந்து சிறந்த கிறிஸ்தவ விசுவாசிகளாக திகழ்ந்தார்கள்.

லூதர் தான்் பிறந்த ஊரான ஐஸ்லோமுவைப் பார்க்க விரும்பினார். கொடிய குளிர்காலம் என்றும் பாரா மல், பிறந்தகத்துக்கு அவர் பயணம் செய்ததால், அவருல் குக் கொடிய காய்ச்சலும், குளிரும் பற்றிக் கொண்டிது.