பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

மார்ட்டின் லூதர்


கட்டிக்கொண்டு கடலிலே குதிக்கிறான்," இப்படி பேசுகின்றனர் அங்காடியிலே கூடியிருந்த மக்கள்.

மக்களின் கலக்கம்.

தற்குள் மார்ட்டின் கடைத் தெருவை அடைந்துவிட்டான். அன்றாடம் ஆயிரம் பேர்கள் அவ்வழிச் செல்பவர்கள். இவனும் அவ்வழி ஆயிரந் தடவை சென்றிருப்பான் ஆனால் அன்று இவன் அனைவருடைய கண்களுக்கும் காட்சிப் பொருளாகவே காணப்பட்டான். பெயரை மாத்திரம் கேள்விப்பட்டு, ஆளை நேரில் பார்த்தறியாதவர்கள் கற்சிலை போல் நின்றுவிட்டார்கள். "இவனா மார்ட்டின் லூதர்? துரிங்கியாவின் ஏழைக்குடியானவன் மகன். படித்துப் பட்டம் பெற்ற இவன் ஏதாவது பிழைப்பைப் பார்க்கக்கூடாதா? நமக்கேன்டா விஷப்பாம்போடு விளையாட்டு," என்ற வேதாந்தம் பேசினர் மக்கள்.

அகற்குள் மற்றோர் ஆள் ஓடி வந்து மற்றேர் உத்திரவைக் கொடுக்கின்றான். பார்த்து படித்துப் பார் குலுங்க சிரிக்கின்றன். விழுந்து விழுந்து சிரிக்கின்றான், விலாநோகச் சிரிக்கின்றான். சிரிக்க சக்தியற்று கீழே விழும்வரையில் சிரிக்கின்றான். அந்த அடங்காத சிரிப்புக்கு என்ன காரணம்? அது அவ்வளவும் கோபச்சிரிப்பு ஏன்? போப் அனுப்பிய உத்திரவில், லூதரை மதப்பிரஷ்டம் செய்திருப்பதாக எழுதியிருந்தான்.