பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மார்ட்டின் லூதர்ஆறுதல்

ரை சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் கடலோடுகிறான் மீன்வலைஞன். புயலுக்குப் பயந்தால் அவன் புறப்பட முடியுமா?

வாழ்வோம் என்ற நம்பிக்கையில்தான் துணை தேடுகிறான் மனிதன். இடையிலே கைவிடப்படுவோம் என்ற அவநம்பிக்கை கொண்டால் மணம் செய்துகொள்ள முடியுமா?

ஊதியம் பெற்று உயிர்வாழ்வோம் என்ற நம்பிக்கையால்தான் தொழிலகம் செல்கிறான் தொழிலாளி. தடியடிபடுவோம் என்று நினைத்தால் அவன் வாழ முடியுமா?

முத்தெடுப்போம் என்ற நம்பிக்கையால்தான் கடலடிவாரத்தில் செல்கிறான் கடல் குளிப்போன். சுரா மீனுக்குப் பயந்தால் அவன் தன் முயற்சியில் வெற்றி பெற முடியுமா?

இறுதியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான் விஞ்ஞானி. இடையிலேயே சந்தேகப்பட்டால், இன்றைய அதிசயப் பொருள்களைக் காண முடியுமா? என்றெல்லாம் ஆறுதல் கூறுமுகத்தான் இப்படிச் சொல்கிறான் லூதர், கடைசியாக அவன் நண்பனுக்குச் சொல்லிய ஆறுதல், “My dear brother If I do not come back, if my enimies put me to death,