பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மார்ட்டின் லூதர்



இப்படி எரிந்துகொண்டிருக்கும் இந்த நெருப்புக்கு நெய்யை வார்த்ததைப் போலக் கிளம்பியது மற்றோர் கண்டன அறிக்கை இங்கிலாந்திலிருந்து, எட்டாம் ஹென்றி, எந்த போப்பின் கட்டளைகளை மீறித் திருமணம் செய்துகொண்டானோ அந்த ஆங்கில நாட்டு மன்னன் எட்டாம் ஹென்றியே போப்பை ஆதரிக்கும் முறையில் லூதரைக் கண்டித்து அறிக்கைகள் விட்டான். அதன் காரணமாக அவன் நாட்டிலும் ஐந்தாம் சேர்லெஸின் அதிகாரத்துக்குட்பட்ட ஜர்மன் நாட்டிலும் போப்பாண்டவரின் புனித பூமி என்று நினைத்துக் கொண்டிருந்த ரோமாபுரியிலும் மத ஓடத்தில் ஏறிய மாந்தர்கள் அறியாமையின் காரணமாக அரசன் கட்டிளைக்குக் கீழ்படிந்து சில பலவிடங்களிலே லூதரின் நூல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். "நூல்களை எரிக்கலாம், அதனால் ஏற்பட்ட மனக் கிளர்ச்சியை யாராலும் அடக்கமுடியாது" என்றே அதை ஒரு சாதாரணமெனக் கருதினான் லூதர்.

காணவில்லை

னால் லூதரைத் தேடிக் கொண்டிருக்கும்போது திடீரென மறைந்து விட்டான். எங்கே சென்றான், யாரால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறான் அடுத்து என்ன செய்யத் திட்டமிட்டிருக்கின்றன், என்ற கிளர்ச்சியும் சந்தேகமும் பயமும் அரசாங்கத்தையும் போப்பையும் பிடித்தாட்டின. ஆனால் லூதரை சாமர்த்தியமாக அவன் தோழன்