பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146; மாலை பூண்ட மலர்

அவர்களே குறையுடையவர்களென்ருல் அவர்களை அண்டு பவர்களுக்கு எவ்வாறு குறை தீரும்? தாங்கள் பற்றிக் கொண்ட பற்றுக்கோடே தளருமானல் அவர்களும் தளர வேண்டியதுதானே? -

எனவே, எதலுைம் தளராத நிலை வர வேண்டுமானல் எதற்கும் தளராமல் எல்லாருடைய தளர்ச்சியையும் போக்கும் ஒருவரை அடையவேண்டும். அப்படி உள்ள தல்ைவி அம்பிகை. அவளைப் புகலாகப் புகுந்து அவளுடைய அருளைப் பெற்றவர்களுக்கு மற்றத் தெய்வங்களை நாட வேண்டிய அவசியம் இல்லை. அம்பிகையைவிட வேறு தெய்வம் இல்லை என்பதை உணர்ந்தவர் அபிராமிபட்டர். தம்முடைய தொண்டுகளையெல்லாம் அவளுக்கே அர்ப் பணம் செய்தவர். சிவபிரானுக்கே அன்னையாக நிற்கும் பரமேசுவரியைப் பற்றிக்கொண்ட பிறகு வேறு யாருக்குத் தொண்டு செய்வது? அப்படித் தொண்டு செய்தால் அவர்கள் தளர்ச்சி அடையும்போது அவரும் தளரவேண்டி யிருக்குமே! ஆகவே அவர், எவர்க்கும் மேலான தெய்வ மாகிய உன்னைப் புகலாக அடைந்து உன் திருவடிக்குத் தொண்டு செய்யும் அடியேன் வேறு ஒரு தெய்வம் இருப்பதாக எண்ணி ஏமாந்து போகமாட்டேன்; அவ்வாறு எண்ணி வழிபாடு செய்தல் முதலிய தொண்டுகளை மெய்யிஞ்ல் செய்யமாட்டேன்; அப்படிச் செய்வதனல் அவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நீக்கமுடியாது என்பதை அறிந்து, நான் தளர்ச்சி அடைய மாட்டேன்’ என்று உறுதியாகச் சொல்கிரு.ர். . -

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக

மெய்த் தொண்டு செய்தே.

முன்பும் ஒரு பாடலில் 'மாத்தவளே உன்னை அன்றி மற்ருேர் தெய்வம் வந்திப்பதே' (13) என்று பாடினர்.