பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலை பூண்ட மலர் 13

இந்த மும்மூர்த்திகளும் அடியவர்களாக நினறு வணங்கிப் பணிவுடன் அம்பிகையை ஏத்துகிருர்கள்.

'சந்திப் பவர்நாற் றிசைமுகர், நாரணர் சிந்தையுள்ளே . . பந்திப் பவர் அழி யாப்பர மானந்தர்' என்று முன்னும் இவர் பாடினர் (14)

ஈரேழுலகையும் படைக்கும் பிரமனும், காக்கும் திருமாலும், அழிக்கும் சிவனும் இறைவியின் சந்நிதானத் தில் அடியவராகி நின்று ஏத்துகிருர்கள்.

ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம். இவ்வாறு மும்மூர்த்திகளும் புகழும் பெருமாட்டிக்குப் புகழ்மாலே அரிதென்று சொல்லலாமா? அவர்கள் ஏத்திய தால் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்து வளைய வருகிருர்கள். அவர்களுடைய துதி மாலைகள் ஏறிய திருவடிக்கு என்னுடைய புன்மொழிகளும் ஏறினவே!" என்று வியக்கிருர் ஆசிரியர்.

எம்பெருமாட்டி அடிமுதல் முடிவரையில் மணம் பொருந்திய பொருள்களை அணிபவள். அவளுக்குக் கதம்ப மலர் என்ருல் மிகவும் விருப்பம். கதம்ப குஸ-மப்ரியா (323) என்பது அவளுடைய திவ்ய நாமங் களில் ஒன்று. அவள் கதம்ப வனத்தில் வாழ்கிறவள். தன்னுடைய அழகிய கூந்தலில் கடம்ப மலரைத் தரித்திருக் கிருள். முடி கதம்பம் மணக்கிறது. அடியும் மலர்கள் மனக்கிறது. பூங்கடம்பு சாத்தும் குழலும், மனம் நாறும் தாளினையும் உடையவள் அவள். * -

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே, மணம்

நாறும் நின் தாளிணைக்கு.