பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மாலை பூண்ட மலர்

மும்மூர்த்திகளும் போற்றிப் புகழும் பெருமாட்டி என் புன்மொழியையும் ஏற்றுக்கொண்டாள். மணம் நாறும் குழலும் அடியும் உடையவள் என் மணமற்ற புன் மொழியை ஏற்றுக்கொண்டாள். அவள் பெருங்கருணை இருந்தவாறு என்னே! என் புன் மொழிகளுக்குக் கிடைத்த பேற்றை எண்ணுகையில் எனக்கே சிரிப்பு வருகிறது' என்று பாடுகிருர் அபிராமிபட்டர்.

ஏத்தும் அடியவர், ஈரே ழுலகினை

யும்படைத்தும்

காத்தும் அழித்தும் திரிபவ ராம்; கமழ் பூங்கடம்பு * .

சாத்தும் குழல்அணங் கே, மணம் நாறும்கின்

தாளிணக்குஎன்

நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு

நகையுடைத்தே!.

(மணம் வீசுகின்ற கடம்பமலரை அணியும் கூந்தலை யுடைய தெய்வப் பெண்ணே உன்னைத் துதிக்கும் அடியவர்கள் பதினன்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவர்களாகிய மும் மூர்த்திகள், அப்படி இருக்க மணம் வீசுகின்ற நின்னுடைய இரண்டு திருவடிகளுக்கு ஒன்றுக்கும் பற்ருத அடியேனுடைய தாக்கில் தங்கிய பொலிவற்ற ம்ொழிகள் ஏறிய செயல் நகைக்கத் தக்கதாக இருக்கிறது!

ஏத்துதல்-துதித்தல். இணை-இரண்டு, புன்மொழி:சொற்சுவை பொருட் சுவை இல்லாத மொழி.1 - - தம் மொழிகளே எண்ணும்போது நகையுடைத்து என்று கூறிஞலும். அம்பிகை பெருங்கருணையினல் செளலப்யத்தோடு வந்து ஏற்றுக்கொண்ட்ாள் என்ற வியப்பை உள்ளுறையாகக் கொண்டது இப்பாட்டு. -

இது அபிராமி அந்தாதியில் 26-ஆம் பாட்டு.