பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன அதிசயம்!

தம்முடைய புன்மொழியையும் அம்பிகை ஏற்றுக் கொண்டாள் என்பதை எண்ணி மகிழ்ந்த அபிராமிபட்டர் அப்பெருமாட்டியால் தமக்கு உண்டாகியிருக்கும் உயர்ந்த வாழ்வை இப்போது சிந்தித்துப் பார்க்கிருர். அன்னையின் அருளால், இனிப் பிறவாத உறுதி அவருக்கு வந்திருக் கிறது. பிறவிப் பெருங்கடலுக்கு நாவாயைப் போன்ற அன்னையின் திருவடிகளை இறுகப் பற்றிக்கொண்ட அவருக்கு, இந்தப் பிறவியில் அடைய வேண்டியதை அடைந்த விட்டமையால், இனிப் பிறக்கவேண்டிய அவசியமே இல்லாமற் போயிற்று. அகங்கார மமகாரத்தை ஒழித்து, தம் செயல் என்ற உணர்வே இல்லாமல், எல்லாம் அவள் செயல் என்று உணரும் அநுபவ நிலையில் இருப்பவ ராதலால் அவருக்கு வினை இல்லை. ஆகையால் அதனுல் வரும் விளைவாகிய பிறப்பும் இல்லை. அது இப்போதே புலளுகிறது. சுந்தரமூர்த்தி நாயனரும்,

பெற்றலும் பிறந்தேன் இனிப்

பிறவாத தன்மை வந்து எய்தினேன்" என்று பாடுகிறர்: அவ்வளவு உறுதி, உண்மையான பக்தர் களுக்கு உண்டாகும். அன்னேக்கு, ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜனவிச்ராந்தி தாயினி” (851) என்பது ஒரு திருநாமம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்ருல் வருந்தும் மக்களை அத்துன்பங்களினின்றும் நீக்கி அமைதியைக் கொடுப்பவள் என்பது அதன் பொருள். ஜன்மக் கனலால் வரும் தாபத்தை நீக்கும் பிராட்டி அவள். -

நாம் எடுக்கும் பிறவி ஒன்ரு இரண்டா? அநாதி ಹT6ು மாக நாம் பிறந்து பிறந்து இறந்து வருகிளுேம். இதற்கு