பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தவமும் கைதவமும் 153

- அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச்

செய்தவமோ?

இப்படி அவர் கேட்பது உண்மையில் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்காக அல்ல. தாயே நான் உன்னை வணங்குவதில்லை. உன் தொண்டு செய்வதில்லை. அதனல் என்னை வெறுக்கக்கூடாது. அவற்றைச் செய்யாதவர்களை உயர்ந்த அநுபூதி நிலையில் நீ வைத்திருக்கவில்லையா?” என்று வேடிக்கையாகக் கேட்கிரு.ர். பெரியவர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பது கண்டு நாமும் அப்படி இருக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு. பரீட்சைக்கு நன்ருகப் படித்து எழுதவேண்டியவற்றையெல்லாம் எழுதி, அதில் தேர்ச்சி பெற்றவர்கள், தாம் படித்த அடிப்படைப் புத்தகங்களை மறுபடியும் படிப்பதில்லை. கற்று மேல் போன அவர்களுக்கு அந்தப் புத்தகங்களால் பயன் ஒன்றும் இல்லை. அதைக்கண்டு கல்லாத ஒருவன், அவரும் அதைப் படிக்கிற தில்லை; நானும் அதைப் படிக்கமாட்டேன்' என்று சொல்லலாமா? தாயுமான வரைப்போல நாமும், மலர் பறித்து இறைவனுக்கு அருச்சனை செய்யமாட்டோம். இறைவனைக் கும்பிடமாட்டோம்' என்று சொல்லலாமா? எதிரில் நின்ற மலரிலும் இதயகமலத்திலும் இறைவனைக் காணும் உயர்ந்த பக்குவத்தில் நின்று அவர் பேசினர். நமக்கும் அந்தப் பக்குவம் வந்தால் பூசை முதலியன செய்யவேண்டியதில்லை. அநுபவ இன்பத்தில் புகுந்தவர் களுக்குச் சாதனங்களாகிய செய்கைகள் தாமே நழுவி விடும். அவை தாமே நழுவுவது வேறு, நாமாகச் செய்யாமல் சும்மா இருப்பது வேறு. முன்னவர் நிலை செயலற்ற நிலை; பின்னவர் நிலை சோம்பல் நிலை. இரண்டும் ஒன்ரு குமா? - *