பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப வாழ்வு 167

பண்டங்களை ஈட்டுவதல்ை இன்பவாழ்வைப் பெற இயலாது என்ற முடிவுக்கே வரவேண்டி நேரும். துன்பத்துக்குக் காரணமான அறியாமை, கர்மம் ஆகிய வற்றைப் போக்கிப் பிறப்பு இறப்பு என்ற இரண்டு பெருந் துன்பங்களையும் வாராமற் செய்து காப்பாற்றும் ஆற்ற லுள்ள துணையொன்று கிடைத்தால் இன்பவாழ்வை அடையலாம்; வாழாத வாழ்வினின்றும் நீங்கி வாழும் வாழ்வைப் பெறலாம். .

அவ்வாறு செய்தற்குரிய துணையை நான் கண்டு கொண்டேன்' என்று துள்ளிக் குதிக்கிருர் அபிராமி பட்டர்.

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்

என்று தொடங்குகிரு.ர். நான் என்றும் இன்பமாக வாழும் படியாக ஒரு துணையை, ஒரு பரம்பொருளைக் கண்டு கொண்டேன்’ என்கிரு.ர். கண்டுகொண்டேன் என்பதைக் கண்டேன் என்ற பொருளை உடையதாக வைத்து உரை கூறுவதைவிட கண்டேன், பிறகு கொண்டேன் என்று இரு வேறு நிலையில் உள்ள செயல்களாக வைத்துப் பார்ப்பது சிறப்பு. காணுவது மெய்ஞ்ஞானத்தால் அறிவது; கொள்வது தனக்கு உரியதாகக் கொண்டு நுகர்வது.

கந்தன்என் றென்றுற்றுனைநாளும்

கண்டுகொண் டன்புற் றிடுவேனே’’

என்ற திருப்புகழில் காணுவதும் கொள்வதும் தனித் தனிச் செயலாக இருப்பதைப்போல இங்கும் கொள்ளவேண்டும்.

இதுவரையில் வகை தெரியாமல் திகைத்த நான் இப்போது கண்டுவிட்டேன்; என் கைக்கு அகப்பட்டு விட்டது; அதை என்னுடையதாகவே அடைந்துவிட்டேன்” என்று பொருள் விரிக்கும்படி இருக்கிறது. இது. இதுவரை யில் வாழ்வதற்கு இது பயன்படும் என்று அறிவினல் அறிந்தவை, கைக்கொண்டபிறகு பயன்படாமல் ஒழிந்தன,