பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மாலை பூண்ட மலர்

அலைந்துகொண்டே இருப்பதல்ை எதனையும் அழுத்தப் பதித்துக்கொள்ளும் திறமை இல்லாமல் இருக்கிறது. நமக்கு மிகவும் விருப்பமான பொருளைக்கூடக் கண்ணே மூடினல் தெளிவாகக் காணும் இயல்பு நமக்கு இல்லை. நம்மோடு ஒட்டி உறவாடி அன்பு செய்து இன்பம் தந்து நகமும் சதையும் போல ஒன்றி வாழும் மனைவி ஊருக்குப் போயிருக்கிருள். அப்போது கண்ணை மூடி அவளை நினைத்தால் அவளுடைய வடிவம் தெளிவாக நம்முடைய மனத்தில் தோன்ருது. மனத்தின் இயல்பே அதுதான் என்று சொல்லலாம். ஆணுல் நாம் காணும் கனவில் வடிவங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆகவே, மனத் துக்கு உருவங்களைத் தெளிவாகக் காணும் இயல்பு உண்டென்று உணரலாம். நனவில் கண்ணை மூடியபோது அப்படித் தெரிவதில்லை. கனவில் நம்முடைய இந்திரியங்கள் எல்லாம் தொழில் செய்யாமல் அடங்கியிருப்பதனல் மனத்தில் தெளிவான உருவம் தோன்றுகிறது. நனவில் அப்படி இருப்பதில்லை. பகலில் சன்னல்களைத் திறந்து வைத்து உள்ளே விளக்கு ஏற்றினல் அதன் ஒளி தெளிவாகப் படர்வதில்லை. சன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டால் விளக்கின் ஒளி நன்ருகப் பிரகாசிக்கும். அப்படியே பொறிகளின் வாயிலாக மனம் செல்லாமல் உள்முகமாக நிற்கப் பழகினல் தியானப் பொருளைத் தெளிவாகக் காணலாம். இதையே நனவில் கனவுநிலை என்று சொல்வார்கள். இது ஒருவனுக்குச் சித்திக்குமாளுல் எந்தச் சமயத்திலும் தன் மனத்தை நிறுத்தும் ஆற்றல் பெறுவான். அப்போது பரிமளப் பச்சைக்கொடியாகிய அம்பிகையைப் பதித்து இடர் தவிர்ந்து இருக்கலாம். இவ்வாறு ஒரு கணப்போது இருந்தாலும் மிக்க பயன் உண்டு. ஒரு கணப்போது இருக்கப் பழகியவர்கள் தொடர்ந்து பல நேரம் இருக்கும் பழக்கத்தைப் பெறுவது எளிது. - - - -