பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணமே அரண்

பக்தர்களுக்கு இறைவனுடைய திருநாமங்களை

அடிக்கடி சொல்லுவதில் ஒர் இன்பம் உண்டாக்கும். பல வகையான நாமங்களைச் சொல்லி மகிழ்வதும், ஒரே நாமத்தைப் பலமுறை சொல்லி இன்புறுவதும் அவர்களு டைய இயல்பு. பக்தி முறுகி நிற்கும்போது ஒரு நாமத் தையே மீட்டும் மீட்டும் கூறி இன்புறுவார்கள். அப்போது அந்தத் திருநாமத்தின் எழுத்து, சொல், பொருள் என்பன உள்ளத்தில் தோன்றுவதில்லை. சுழற்றிவிட்ட பம்பரம் வேகமாகச் சுழலுவதுபோல ஒரே நாமத்தைத் தொடர்ந்து பலகால் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இது பக்தியில் ஒரு வகையான வெறிகொண்ட நிலை.

அப்படியின்றி இறைவளுடைய பல திருநாமங்களை அவற்றின் பொருளை உணர்ந்து கூறுதலும், கூறி அருச்சனை செய்தலும் பக்தர்களுடைய இன்பத்தை மிகுதிப்படுத்தும் செயல்கள். இறைவனுடைய திருநாமம் ஒவ்வொன்றும் சிறந்த பொருளை உடையது. திருநாமத்தைச் சொல்லும் போது அதனால் புலனாகும் இறைவனுடைய இயல்பை எண்ணி உருகுவது அன்பர்களின் தகைமை, அவனுடைய உருவ அமைப்பையும் கருணையையும் பராக்கிரமத்தையும் அனத்த கல்யாண குணங்களையும் திருவிளையாடல்களையும் குறிப்பனவாக அந்தத் திருநாமங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு மூர்த்திக்கும் தனித்தனியே சகசிரநாமம் உண்டு. சில மூர்த்திகளுக்கு வெவ்வேறு வகையில் வெவ்வேறு சகசிர நாமங்கள் இருக்கும். சில தலங்களில் அந்தத் தலங்களுக்கே உரிய சகசிரநாமங்களும் இருக்

LD πόσυ-13 .