பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 மாலை பூண்ட மலர்

படைப்புத் தொழிலை இயற்றும் நான்முகியாகச் சொன்ன பிறகு தொடர்ந்து எம்பெருமாட்டி காத்தல் தொழிலேயும் செய்வது நினைவுக்கு வருகிறது. திருமாவின் வடிவத்தில் நின்று அந்தச் செயலே அவள் ஆற்றுவதால் கோப்த்ரி (266), கோவிந்தரூபிணி (267). விஷ்ணுரூபிணி (893) என்ற திருநாமங்கள் வந்தன. நாராயணி (298) என்ற திருநாமமும் அப்பொருள் கொண்டே அமைந்தது ஆகவே நான்முகி என்றவர் தொடர்ந்து,

நாராயணி

என்ருர். நாராயணளுேடு சம்பந்தம் உடையவள் நாராயணி என்று பொருள் செய்து, நாராயணன் என்ற சொல் ஜீவர்கள் சென்று சேரும் இடமாக நிற்கும் சிவனைக் குறிப்பது என்பர். நாராயணளுகிய திரும்ாலுக்குச் சகோதரி யாதலின் நாராயணி என்ற திருநாமம் வந்தது. சுபார்சுவ rேத்திரத்தில் இருக்கும் அம்பிகைக்கு நாராயணி என்ற திருநாமம் உண்டு என்று பத்மபுராணம் கூறு கிறது. .

அம்பிகையினுடைய திருக்கரங்கள் தாமரையைப் போல இருக்கின்றன. அவற்றில் ஐந்து மலரம்புகளைத் தரித்திருக்கிருள். ஆதலின் அப்பெருமாட்டியை,

பஞ்ச நாயகி

என்று அடுத்துச்சொன்னர். ஐந்து தன்மாத்திரைகளையே பஞ்ச பாணங்களாக அம்பிகை ஏந்தியிருக்கிருள். அவை தாமரை, மாம்பூ. அசோகம், முல்லை, நீலம் என்பவை. பஞ்ச தன்மாத்ர சாயகா (11) என்ற நாமத்தை லலிதா சகசிரநாமத்தில் பார்க்கலாம். . -

அடுத்தபடி,

சாம்பவி