பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FT6Tಡಿ அரண் 197

என்கிருர். சம்புவாகிய பரமேசுவரனுக்குத் தேவியாக

இருப்பதால் இந்தத் திருநாமம் வந்தது. சம்புமோஹினி (964) என்பது அந்தப் பெருமாட்டியின் திருநாமங்களில் ஒன்று. சாம்பவி என்னும் திருநாமம் 112-ஆவதாக லலிதா சகசிரநாமத்தில் அமைந்திருக்திறது. சிவபக்தர்

களாகிய சாம்பவர்களுடைய அன்னையென்றும், எட்டு வயதுள்ள கன்னிகையென்றும் இந்தத் திருநாமத்துக்கு வேறு பொருள்கள் உண்டு.

அடுத்தபடி பட்டர் நினைக்கின்ற திருநாமம்,

சங்கரி -

என்பது, சாங்கரி (126) என்று லலிதா சகசிரநாமத்தில் வருகிறது. சங்கரருடைய பத்தினி யென்றும், சுகத்தைச் செய்பவளென்றும் இத் திருநாமத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும். அன்பர்களுக்கு அருள் தந்து இன்பத்தை உண்டாக்குபவளாதலின் எம்பெரும்ாட்டிக்கு இந்தத் திருநாமம் அமைந்தது.

அடுத்தபடி,

ಆTLಒ7

என்று போற்றுகிருர், ச்யாமளா என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. காளிதாசன் இயற்றிய ச்யாமளா தண்டகம் என்ற நூல் ஒன்று உண்டு. சியாமள நிறம் பொருந்தியமையின் இத்திருநாமம். அமைந்தது, ச்யாமாபா (468) என்பது லலிதா சகசிரநாமத்தில் இந்தப் பொரு ளோடு வரும் திருநாமம். பதினறு வயதுடைய கன்னி கைக்கு இப்பெயர் அமையும். ஒருவகைப் பச்சை நிறத்தைச் சியாமளம் என்று சொல்வார்கள்.

அம்பிகை சிவபெருமானைப்போன்ற அங்க அடை யாளங்கள் பலவற்றை உடையவள். சிவபெருமான் :பாம்புகளை ஆபரணமாக அணிந்ததுபோல எம்பெரு