பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 மாலை பூண்ட

மாட்டியும் அணிந்திருக்கிருள். பாம்புகளுக்குள் உயர்ந்தவை: நாகப்பாம்புகள். அவற்றையே அம்பிகை மாலையாகத் தரித்திருக்கிருள். இதை நினைந்து,

சாதி நச்சுவாய் அகிமாலினி

என்கிருர், ஆசிரியர். சோதி படலசூடி காகோடி பணிம தாணி மார்பாளே' (தக்க. 105) என்று ஒட்டக்கூத்தரும், 'நாகபூஷணத்தி அண்டம் உண்ட நாரணி (திருப்புகழ்) என்று அருணகிரிநாதரும் போற்றுவர். இலங்கையிலுள்ள நயின தீவில் எழுந்தருளியிருக்கும் அன்னைக்கு நாகபூஷணி என்ற திருநாமம் வழங்குகிறது. -

அடுத்தபடி ஆசிரியர் நினைக்கும் திருநாமம்,

வாராகி

என்பது. இத்திருநாமம் வராகி என்றும் வழங்கும். இந்த அந்தாதியில், சூலிவராகி (77) என்று பின்னே பாடுவர். விஷ்ணுசக்தி வகையில் ஒன்முக நிற்பவள் வராகி. அம்பிகையின் சேனைத்தலைவியாகிய அம்ச சக்திக்கு வாராகி என்று பெயர் உண்டு. 'பராசக்தி வராகானந்த நாதர் என்பவருக்கு வராகத் திருமுகத்துடன் தரிசனம் தந்தமையின் வாராகி என்னும் பெயர் பெற்ருள்' என்று திரிபுரா சித்தாந்தம் என்னும் நூல் கூறுகிறது. வராகியை முப்பத்திரண்டு செய்யுட்களால் துதிக்கும் வராகி மாலை. என்னும் நூல் ஒன்று தமிழில் உண்டு. சப்த மாதாக்களுக் குள் வராகத் திருமுகத்துடன் உள்ள வராகி என்னும் சக்தி யும் உண்டு.

சிவபெருமானப்போல அம்பிகையும் முத்தலைச் சூலத்தை ஏந்தியிருக்கிருள். அதனல் அவளுக்குச் சூலினி என்ற திருநாமம் வந்தது. அதை அடுத்தபடி சொல்கிருர் ஆசிரியர். சூலாத்யாயுத சம்பன்ன' -(லலிதா, 506)