பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மால்ை பூண்ட மலர்

தண்மையும், மென்மையும், விரிவும் அந்தத் திருவடிக்கு உண்டு. அதோடு ஞான மணமும் ஆனந்தத் தேனும் பில்குவது. அதனைத் தொழுவது அடியார் திறம். அடியைப் பற்றிக் கொள்வதல்ைதான் அடியார் என்ற பெயர் அமைந்தது. இரவும் பகலும் இடைவிடாமல் அம்மையின் திருவடியைத் தொழுகிரு.ர்கள். அத்தகையவர்கள் மிகச் சிறந்த பேற்றை அடைகிருர்களாம். -

அவர்களுக்கு இந்த உலகத்திலே சிறந்த இன்ப வாழ்வு உண்டாகிறது. இம்மை வாழ்வுக்குச் சிறப்பைத் தருவது பொருள். - .. -

பொருளிலார்க் கிவ்வுலகம் இல்லை’’

என்பது திருக்குறள். செல்வம் பெற்றவர்களுள் சிறந்த வன் அரசன். அவனுடைய செல்வத்தை ராஜபோகம் என்றும் அரசத்திரு என்றும் சிறப்பித்துச் சொல்வார்கள். அரசனுக்கும் சில சமயங்களில் துன்பம் உண்டாகும். பகைவர்களால் தன் அரசை இழக்கும் நிலை வரும். அத்த கைய நிலை வராமல் அழியாத அரசத்திருவுடன் விளங்கும் வாழ்வை அன்னையின் அடியவர்கள் பெறுவார்கள்.

கின் புது மலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே

அழியா அரசும்

அம்பிகைக்கு ராஜ்ய தாயினி (685) என்ற திருநாமம் - ஒன்று உண்டு. - - - -

அரசச் செல்வம் பெற்று அந்தச் செல்வத்தால் தருக் குற்று வாழ்ந்தால் அவர்களுக்கு நன்மை இல்லை. நன்ரு கப் போக போக்கியங்களை அநுபவித்துவிட்டுப் பிறகு எல்லா

வற்றையும் துறந்து தவம்புரிவது பழைய கால அரசர் வழக்கம். தசரதன் தவம்புரிய எண்ணியே இராமனுக்கு