பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மாலை பூண்ட மலர்

'தவமும் தவமுடையார்க் காகும்'

என்று வள்ளுவர் சொன்னர். தவநெறியில் தொடர்ந்து செல்லும் திறமை அன்னையின் அருள் பெற்றவர்களுக்கே சாத்தியமாகும். . - x

அன்னையின் திருவடியைப் பற்றிக்கொண்டு, அறம், பொருள், இன்பம் நிரம்பிய இக வாழ்விலே இன்புற்று வாழ்ந்து, பிறகு வீட்டு நெறியாகிய தவத்தை மேற் கொண்டு, முடிவில் பேரின் பப் பெருவாழ்வை அடைவார் கள் அன்பர்கள்.

சொல்லும் பொருளும் எனகடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி

யே கின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும்அவர்க்

கே.அழி யாஅரசும் செல்லும் தவநெறி யும் சிவ

லோகமும் சித்திக்குமே.

|சொல்லும் பொருளும் போல ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராசப் பெருமானுடன் இணையும் ஞான மணம் வீசும் மலர்க்கொடி போன்ற அன்னேயே, அப்பொழுதலர்ந்த தாமரை மலரைப் போன்ற நின்னுடைய திருவடியை இரவும் பகலும் தொழுகின்ற அடியவர்களுக்கு, பகைவர் களால் அழிவு வராத அரசச் செல்வமும், பயனடையும் வரையில் செல்லும் தவநெறி வாழ்வும், இறுதி யில் மோட்சமாகிய சிவலோக பதவியும் கிடைக்கும்."

புல்லும்-இணைந்திருக்கும். அல்-இரவு. சிவலோகம் என்றது இங்கே முக்தியைக் குறித்துநின்றது.1 -

, 2 இது அபிராமி அந்தாதியில் 28-ஆவதுபாடல்.